சமீபகாலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளும் சீரியலை விரும்பி பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக பார்க்கப்படுவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தீபிகா.
இவர் திடீரென சீரியலில் இருந்து நீக்கப்பட்டார் அதற்கு காரணம் முகத்தில் முகப்பருக்கள் இருப்பதால் சீரியலில் இருந்து நீக்கி விட்டார்கள் என அவரே கூறினார். இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வந்தது அது மட்டுமில்லாமல் எதற்காக தீபிகாவை தூக்கிணீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்த நிலையில் தீபிகா தற்போது வேற வேற சீரியலில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சொந்தமாக யூடியூபில் ஒரு புதிய சேனலை உருவாக்கி அதனை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி புதுப் புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தீபிகா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் அவர்களின் பெற்றோர் வீடுகூட இல்லாமல் தவித்து வந்தார்கள். இந்த நிலையில் தீபிகாவின் பெற்றோர்களின் கவலையை தற்போது அவர் போக்கி உள்ளார்.
அதாவது சிறியதாக ஒரு வீடு ஒன்றை கட்டிக்கொடுத்து தீபிகா தன்னுடைய பெற்றோர்களை அந்த வீட்டில் தங்க வைத்துள்ளார் அதன் புகைப்படங்களை சமூக வளைதளத்தில் தீபிகா பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தீபிகாவிற்கு பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் அந்த பதிவில் அவர் கூறியதாவது சின்ன வயசுல டீச்சர் பெரிய பசங்களா ஆனதும் அப்பா அம்மாவுக்கு என்ன செய்வீங்க என்று கேட்டால் நிறைய பேர் வீடு கட்டிக் கொடுப்போம் என சொல்லுவோம். ஆமா எல்லா பசங்களுக்கும் அப்பா அம்மாவிற்கு சொந்தமா ஒரு வீடு கட்டி தரணும்னு கண்டிப்பாக ஆசை இருக்கும் வீடு ஒரு சின்ன விஷயம் இல்ல அதுல 1000 கணக்கான எமோஷன் இருக்கு இன்னைக்கு எங்க அம்மா அப்பாவுக்கு என்னால முடிஞ்ச ஒரு கிப்ட் கொடுத்து இருக்கேன்.
உங்களுக்கு இது சின்ன வீடா தான் தெரியும் ஆனா அதுல வாழ போற எங்களுக்கு இது கனவு நிம்மதியா தூங்க ஒரு இடம் வேணும் நெனச்சா உங்களுக்கு இது குட்டி வீடு கண்டிப்பாக சந்தோஷம் தரும் என்று நம்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.