விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்ட வரும் நிலையில் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல் என்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சித்ரா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர் தற்கொலையில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் பலரும் கூறி வந்த நிலையில்.
சித்ராவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் படி சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என உறுதி செய்தார்கள் அதுமட்டுமில்லாமல் அவர் தற்கொலைக்கு காரணமான இருந்த ஹேமந்த் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
ஏனென்றால் ஹேமந்த் சித்ராவை இன்று யாருடன் நடனம் ஆடினாய் என சித்ராவை ஹேமந்த் சண்டை போட்டுள்ளார். அதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்ரா நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்ததாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவியா என்பவர் நடிக்க இருக்கிறார், இவர்தான் பாண்டியன் ஸ்டோர் செய்திகளில் புதிய முல்லை என பலரும் வரவேற்றுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Chitravj pic.twitter.com/WQjdBYOSZb
— Tamil360Newz (@tamil360newz) December 26, 2020