தமிழ் புத்தாண்டையொட்டி தனது ரசிகர்களை சந்தோஷ படுத்த புகைப்படங்களை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் பிரபலம்.

chitra
chitra

Serial actress chitra new look photo: சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவரும்  சித்ரா பிரபலமான நபர்களில் ஒருவராக விளங்குகிறார் என்பது குறிப்பிடதக்கது. இவரை பார்ப்பதற்காகவே பலர் தற்போது சின்னத்திரை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருவது மட்டுமல்லாமல் பொது மக்களையும் கவர்ந்து வருகிறார்.

சித்ரா அவர்கள் பிரபல தொலைக்காட்சியில் சீரியல் மற்றும் தொகுப்பாளர் பணிகளில் தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் பிடித்துக்கொண்டார். ஆரம்பத்தில் பல சறுக்கல்கள் வாழ்வில் வந்தாலும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தார் இந்த நிலையில் 2011 பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி சீசன் 2வில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ், அஞ்சறைப்பெட்டி போன்ற நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி மேலும் பிரபலம் அடையத் தொடங்கினார்.

திரும்பவும் அவர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் மூலம் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது அந்த சீரியலில் தனது முழு கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சமுகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் சித்ரா, அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடியே தனது ரசிகர்களை கவரும் வகையில்  புகைப்படங்களை அள்ளி வீசுவருகின்றார். அந்தவகையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ரோஸ் கலர் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்

chitra
chitra