தனத்திற்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை தெரியுமா.? சந்தோஷத்தில் பாண்டிய ஸ்டோர் குடும்பம் – இன்றைய எபிசோடு

pandian store
pandian store

Pandian store : விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் மீனா,ஜீவா, கதிர், முல்லை, மூர்த்தி, தனம், கண்ணன், ஐஸ்வர்யா போன்ற பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில்.. ஐஸ்வர்யா பழையபடி வீடியோ எடுத்துட்டு இருக்காங்க அதை பார்த்து அவங்க சித்தி இன்னும் இத நீ நிறுத்தலையா சின்ன பிள்ளை மாதிரி வீடியோ எடுத்துட்டு இருக்க அப்படின்னு போன பிடுங்கிடுறாங்க.. தனம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தனத்திற்கு சிசேரியன் செய்ய மூர்த்தி சம்மதிக்காமல் இருந்த நிலையில் ஒரு வழியாக இன்று அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மீனா – ஜீவா, கதிர் – முல்லை போன்ற நான்கு பேரும் மூர்த்தியிடம் அக்காவை இனிமேல் வேற ஹாஸ்பிடல் கொண்டு போனால் டைம் ஆயிடும் சிசேரியன் பண்றது ஒரு பெரிய விஷயமே இல்ல அதனால அக்காக்கு சிசேரியன் பண்ண சைன் போட்டு குடுங்க அப்படின்னு மாறி மாறி மூர்த்தி கிட்ட பேசி எப்படியோ மூர்த்திய சம்மதிக்க வச்சிட்டாங்க..

அங்க தனத்தோட அண்ணி வந்து தனம் எப்படி இருக்கு அண்ணான்னு மூர்த்தி கிட்ட கேக்குறாங்க தனத்துக்கு ஆப்ரேஷன் பண்ண போறாங்க அப்படின்னு சொல்லிட்டு மூர்த்தி நர்ஸ் கிட்ட பேப்பர்ல சைன் போட்டு தராரு உடனே தனத்தோட அண்ணன் ஜெகாவும் வந்து மூர்த்தி கிட்ட மாப்பிள்ளை தனத்த நம்ம வேற ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிடலாம்..

நான் எல்லாம் பேசிட்டேன் 15 நிமிஷம் தான் ஆகும் அப்படின்னு சொல்றாரு அதற்கு மூர்த்தி வேணாம் நான் இந்த ஹாஸ்பிடல்லயே சிசேரியன் பண்ண சைன் போட்டு கொடுத்துட்டேன்னு சொல்லிடுறாரு ரூம் வாசல்ல நின்னு எல்லாம் வேண்டிகிறாங்க தனத்துக்கும் குழந்தைக்கும் ஒன்னும் ஆக கூடாதுன்னு..

டாக்டரும் வெளியே வந்து மூர்த்தி கிட்ட தனத்துக்கு பெண் குழந்தை பிறந்துச்சு நீங்க பயந்த மாதிரி ஒன்னும் ஆகல தனமும் குழந்தையும் நல்லா இருக்காங்க குழந்தை ரொம்பவே ஆரோக்கியமா இருக்கு அப்படின்னு சொல்றாங்க எல்லாரும் ரொம்ப மகிழ்ச்சியாகுறாங்க இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.