pandian stores today promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை புரிந்து கொண்டார் இப்படி அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்த சீரியல் முடிவடையும் கட்டத்தை நெருங்கி விட்டது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முடிவடைய இருப்பதால் பலரும் சமூக வலைதளத்தில் இப்படி ஒரு கூட்டு குடும்பத்தை சீரியலில் மட்டும் தான் பார்க்க முடிகிறது நிஜத்தில் இது மாதிரி ஒரு கூட்டு குடும்பம் இதுவரை எங்கும் காண முடியவில்லை என்ன தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளார்கள் அப்பொழுது அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த ஊரே மேச்சிக்கிற அளவுக்கு எங்க குடும்பம் சிறப்பாக இருந்தது என பின்னணியில் பேசுகிறார்கள்.
அடுத்த காட்சியில் கண்ணன் முதன்முதலாக கவர்மெண்ட் வேலைக்கு போனதை பேனர் அடித்து ஒட்டி இருந்ததை காட்டுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவு வார உணர்ச்சிகரமாக எபிசோடை காண தவறாதீர்கள் எனக் கூறுகிறார்கள்.மூர்த்தி என்னுடைய தம்பிகள் அனைவரும் அவரவர்கள் பொண்டாட்டிக்களுடன் சந்தோஷமாக வாழனும் என கூறுகிறார் அப்போது ஐஸ்வர்யா செல்ஃபி எடுக்கிறார்.
இது முடிவல்ல இன்னும் ஓர் அழகான குடும்ப கதையை நோக்கி தொடக்கம் என முடிக்கிறார்கள் இதன் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட போகிறது.