pandian stores (பாண்டியன் ஸ்டோர்ஸ்) : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைசி எபிசோட்டில் மல்லி மூர்த்தி வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருக்கிறார் அப்பொழுது அனைவரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மல்லி வந்தது முல்லைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கணவர் ஜெயிலில் இருந்ததற்கு காரணமே இவர்தான் என பயங்கர கோபத்தில் இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் முல்லை மீனா மீது கோபமாக இருக்கிறார் அதற்கு காரணம் அவ்வளவு சொல்லியும் மீனா தன்னுடைய கணவரை கொலையாளி என நினைத்து விட்டார் என தன்னுடைய கோபத்தை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் வைத்துக் கொண்டு இருந்தார் ஆனால் மீனா வலிய வந்து பேசியதால் அதனை கொட்டி தீர்த்து விட்டார்.
எங்கு பெரிய சண்டை ஆகிவிடுமோ என எண்ணி ஜீவா மற்றும் கதிர் தனத்தை அழைத்து வர இருவரும் சமாதானமாகி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதை பார்த்து கதிர் மற்றும் ஜீவா அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தப் ப்ரோமோ வீடியோவில் ஜனார்த்தனனை டிசார்ஜ் செய்யலாம் என டாக்டர் கூறிவிடுகிறார் ஆனால் பில்லை பார்த்த மீனா அதிர்ச்சி அடைகிறார் மூன்றரை லட்சம் வந்துள்ளது உடனே மீனாவின் அம்மா நான் வீட்டில் போய் செக் புக் எடுத்துக்கொண்டு வருகிறேன் என கூற ஜனார்த்தனன் அந்த படுபாவிதான் எல்லா பணத்தையும் எடுத்துட்டானே என கூறுகிறார். அதற்கு மீனாவின் அம்மா என்னிடம் கொஞ்சம் நகை இருக்கிறது அதை வைத்து விடலாம் என கூறுகிறார்.
அதற்கு ஜீவா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீங்க இங்கேயே இருங்க நான் உடனே வரேன் என கிளம்பி கதிரை அழைத்துக் கொண்டு வந்து பணத்தை மொத்தமாகவும் கட்டிவிட்டு டிசார்ஜ் செய்து அழைத்து செல்ல வருகிறார்கள் அப்பொழுது ஜனார்த்தனன் மூர்த்தியை பார்த்து உன்னோட வளர்ப்பு தப்பா போகலப்பா மூர்த்தி நல்லா தம்பியை வளர்த்திருக்க என பெருமையாக பேசுகிறார்.
ஜனார்த்தனன் மனம் மாறி மூர்த்தி குடும்பத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்டார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.