Pandian stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் தனம் மூர்த்தி இருவரும் மீனா வீட்டிற்கு போயிட்டு வந்ததை அறிந்து கொண்டு முல்லை யார் எப்படி நினைச்சா என்ன மீனா அக்கா கதிர தப்பா நினைக்கவில்லை என கேட்க தனம் அழுகிறார். உடனே தப்பா நினைக்கிறார்களா என முல்லை கேட்கிறார். உடனே மூர்த்தி அந்த பொண்ணோட சூழ்நிலை அப்படி அவங்க அப்பா ஹாஸ்பிடல் கிடக்கிறார் இல்ல அதனால அதெல்லாம் நம்ம பேசி புரிய வச்சுக்கலாம் என மூர்த்தி சொல்கிறார்.
உடனே மீனா அழுது கொண்டே செல்கிறார் அடுத்த நாள் விடிந்ததும் கண்ணனை அழைத்துக் கொண்டு மீனா வீட்டிற்கு முல்லை செல்கிறார் ஆனால் மீனாவின் அம்மா இங்கே எதற்கு வந்தீங்க நேத்து அவங்க ரெண்டு பேரும் வந்து பேசுனாங்க இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்களா எதுக்கு வந்திருக்கீங்க வெளியில் போங்க என மூஞ்சில அடித்தது போல் கூறுகிறார்.
நான் மீனாவிடம் பேச வந்திருக்கிறேன் எனக் கூற என்கிட்ட என்ன பேச போற என மீனா கேட்க உடனே யாரு எப்படி நினைச்சாலும் பரவால்ல நீங்க மட்டும் கதிர தப்பா நினைச்சுறாதீங்க என கூறுகிறார் அதற்கு மீனா நானும் தப்பா நினைக்க கூடாது தான் நினைக்கிறேன் ஆனா சூழ்நிலை அப்படி இருக்கு என பேசுகிறார்.
அங்க என் புருஷன் ஜெயில்ல கிடக்கிறார் இங்க எங்க அப்பா பேச்சு மூச்சு இல்லாம ஹாஸ்பிடல்ல கிடக்கிறார் எப்படி நினைக்க சொல்றீங்க இதுவே உங்க அப்பாவுக்கு ஏதாவது ஒன்னுன்ன இந்த மாதிரி தான் நீங்க பேசிட்டு இருப்பீங்களா என்னோட சூழ்நிலையை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா என முல்லையை பார்த்து கேட்கிறார் உடனே முல்லை நீங்க கோவமா இருக்கீங்க அதனால இப்படி பேசுறீங்க என பேசுகிறார்.
பிரசாந்த் எங்க அப்பாவை ஏமாத்துனாரு ஜீவா அதை தெரிஞ்சுக்கிட்டு சொன்னாரு அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எதுக்காக கதிர் எங்க குடும்பத்துக்குள்ள வராரு கதிருக்கும் எங்க அப்பாவுக்கும் என்ன அவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டா இவரு ஏன் குறுக்க வராரு என மீனா வேண்டா வெறுப்பிற்கு பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் கதிர் எங்க அப்பாவ அடிக்கிறதுக்கு வாய்ப்பில்லைன்னு எப்படி சொல்ற என பேச முல்லை நிலை குலைந்து நிற்கிறார் அப்ப நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா என முல்லை கேட்க வேற எப்படி நினைக்க சொல்ற என மீனா ஒரே அடியாக வாயை மூட வைக்கிறார்.
அடுத்த காட்சியில் மீனா அழுது கொண்ட வீட்டிற்கு வந்து விடுகிறார் உடனே கண்ணனிடம் என்ன ஆச்சு என கேட்க மீனாவுக்கும் முல்லைக்கும் சண்டையாகிடுச்சு என பேசுகிறார்கள். அந்த சமயத்தில் வக்கீல் வருகிறார் வக்கீலிடம் மூர்த்தி பேச என் தம்பி தப்பு பண்ணிருக்க வாய்ப்பே இல்லை நான் அப்படி வளர்க்கல என்பது போல் பாச மழை பொழிகிறார் ஆனா சாட்சி அவர்களுக்கு எதிராக இருக்கு மேனேஜரை மிரட்டினது பிரசாந்த் அடிச்சது எல்லாமே சாட்சி சொல்றாங்க.
ஜாமீன் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை ஆனாலும் நம்ம ட்ரை பண்ணி பார்ப்போம் என வக்கீல் பேசுகிறார். வக்கீல் பேசியதை நினைத்து தனம் அழுகிறார் அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா இவங்க நம்பிக்கை இல்லாத மாதிரி பேசுறாங்க வேற வக்கீல் பார்க்கலாமா என கேட்க நாளைக்கு கேஸ் வருது இப்ப போய் வேற வக்கீல் பார்க்க முடியாது நாளைக்கு முடியட்டும் சரி வரலன்னா வேற வக்கீல் பார்க்கலாம் என தனத்தின் அண்ணன் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.