pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய சீரியலில் மீனாவிடம் அவரது அம்மா நீ அந்த வீட்ல அடி பம்பில் தண்ணீர் எடுக்கும் பொழுது அப்பா எவ்வளவு ஃபீல் பண்ணாரு தெரியுமா, கயல் பாப்பாவுக்கு பீஸ் கட்ட முடியாத பொழுது அப்பா பீல் பண்ணாரு, டாய்லெட் இல்லாம கஷ்டப்பட்ட கூட அப்பா பீல் பண்ணாரு என ஜனார்த்தனன் பெருமையை கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஜீவா மாப்பிள்ளையும் உன்னையும் இங்கே இருக்கும்போது எப்படி அப்பா தாங்கு தாங்குன்னு தாங்கினார் அவருக்கு உங்க குடும்பம் செஞ்சத பாத்தியா என கேள்வி கேட்கிறார்.
உடனே மீனா இனிமே நாங்க போகவே மாட்டேன் என மனசுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த பக்கம் மூர்த்தி அனைவருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார், ஆனால் ஐஸ்வர்யாவின் சித்தி இனி காலத்துக்கும் ஜீவாவும் கதிரும் உள்ள தான் இருக்கணுமா என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கூற உடனே முல்லை கதறி கதறி அழுகிறார்.
அதுமட்டுமில்லாமல் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஜீவாவையும், கதிரையும் வெளியில எடுத்துடுவேன் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் முல்லை அழுது கொண்டிருக்கிறார் உடனே மூர்த்தி மீனா எங்கே என கேட்க அவ எப்பயோ அவங்க வீட்டுக்கு போயிட்டா அவங்க இந்த வீட்ட பத்தி கவலையே படுற மாதிரி தெரியல என ஐஸ்வர்யாவின் சித்தி கூறுகிறார்.
அவ அப்படி பண்ற ஆளே கிடையாது ரொம்ப நல்ல பொண்ணு நமக்கு ரொம்ப சப்போட்டா இருந்தா நம்ம குடும்பத்துக்கு எதுவா இருந்தாலும் சப்போட்டா இருந்தா என்பது போல் மூர்த்தி கூறுகிறார், உடனே தனத்திடம் வானம் நேர்ல போய் மீனாவிடம் புரிய வைத்து கூட்டிட்டு வருவோம் என கூறுகிறார்.
ஹாஸ்பிடல் சென்ற மூர்த்தி ஜனார்த்தனன் இருக்கும் அறையை பார்க்கிறார் உடனே வந்தது தான் வந்துட்டோம் பிரசாந்த பார்த்துட்டு என்ன நடந்தது என்று விசாரிச்சிட்டு போகலாம் என கூறுகிறார். உடனே பிரசாந்தை பார்க்க செல்கிறார் அந்த சமயத்தில் பிரசாத் ஏதோ ஒரு வீடியோவை பார்த்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்க மூர்த்தி வந்ததும் பக்காவாக நடிக்க ஆரம்பித்து விடுகிறார்.
என்ன நடந்தது சொல்லு பிரசாந்த் என கூற உங்க தம்பிங்க தான் கத்தியால குத்திட்டு அவரையும் அடிச்சாங்க மேனேஜரை போட்டு தள்ளுனாங்க எனக் கூற வாய மூடுடா என் தம்பி பத்தி எனக்கு தெரியும் ஒருத்தனுக்கும் துரோகம் செய்யாதவன் இல்ல என் தம்பிங்க யார் சொத்துக்கும் ஆசைப்படாதவன் நீ சொன்னா உண்மை ஆயிடுமா என பிரசாந்தை பார்த்து கேட்கிறார். நீ ரொம்ப நாள் தப்பிக்க முடியாது கண்டிப்பா சிக்குவ என்பது போல் மூர்த்தி மிரட்டுகிறார்.
அந்த சமயத்தில் மல்லி வருகிறார் என்ன கதிரையும் ஜீவாவையும் வெளியில் எடுக்க முடியலன்னதும் பிரசாந்த் மேல அந்த வேகத்தை காட்டுறீங்களா, என கேட்கிறார் அதற்கு தனம் கதிர்யும் ஜீவாவையும் பத்தி எங்களுக்கு தெரியும் அவங்க எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாங்க ஒரு ஈ எறும்புக்கு கூட நாங்க துரோகம் செஞ்சது இல்ல கண்டிப்பா என் தம்பிகளா எப்பாடுபட்டாவது நான் வெளியில கொண்டு வருவேன் என மல்லியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.