pandian Stores today episode october 6 : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் பிரசாந்தை சிக்க வைப்பதற்காக மூர்த்தி பிளான் பண்ணுகிறார் அப்பொழுது ஐஸ்வர்யாவிடம் ஹெல்ப் கேட்கிறார் இதை நான் கச்சிதமா முடிச்சுடுறேன் என கூற அப்பாவுக்கு ஏதாவது ஆயிடுமோ என மீனா பயப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் நானும் வரேன் என முல்லை கூற நீ இங்கே இரு உன்னோட அப்பாவ வர சொல்லு என கூறுகிறார் மூர்த்தி உடனே மீனா மூர்த்தி ஐஸ்வர்யா கண்ணன் என அனைவரும் கிளம்புகிறார்கள் ஹாஸ்பிடலுக்கு.
ஹாஸ்பிட்டல் போன மீனா ஹாஸ்பிடலில் தன்னுடைய தங்கை மற்றும் அம்மாவிடம் வீட்டிற்கு கிளம்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார்கள். ஆனால் ஏன் எதற்கு என அனைவரும் கேள்வி கேட்கிறார்கள் அந்த சமயத்தில் பிரசாந்த் வர நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்களும் கிளம்புங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என கூற உடனே மீனாவும் கிளம்புவது போல் சொல்லிவிட்டு வெளியே சென்று அம்மாவையும் தங்கையும் அனுப்பி வைத்து விடுகிறார்.
பிறகு மீனா ஹாஸ்பிடலில் மறந்து கொள்கிறார் அதேபோல் கண்ணன் மூர்த்தி ஐஸ்வர்யா என அனைவரும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா வீடியோ எடுத்து செக் பண்ணி விட்டு மொபைலை வீடியோ எடுப்பதற்காக உள்ளேயே ஜனார்த்தனன் இருக்கும் அறையில் வைத்து விட்டு வெளியே வருகிறார்.
அந்த சமயத்தில் அனைவரும் எதிர்பார்த்தது போல் பிரசாந்த் வந்து அனைத்து உண்மைகளையும் கூறுகிறார் மேனேஜரை கொன்னன் உங்களையும் இப்ப கொல்ல போறேன் என கூறி தலையணை எடுத்து முகத்தில் அழுத்துகிறார்.
அப்பொழுது ஜனார்த்தனன் துடிதுடிக்கிறார் அந்த சமயத்தில் மூர்த்தி வந்து கொலைகார பாவி நீ தான் எல்லாத்துக்கும் காரணமா என அடித்து பிரசாந்தை இழுத்து செல்கிறார்கள் பிறகு வந்த மீனா அப்பாவுக்கு என்ன ஆச்சு என பதட்டத்தில் இருக்கிறார் திடீரென அப்பாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மற்றவர்கள் அனைவரும் வீடியோ கிடைத்துவிட்டது என பிரசாந்தை வெளியே இழுத்து வருகிறார்கள் இத்துடன் என்ற எபிசோடு முடிகிறது.