Pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் மீனாவிடம் கண்ணன் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஜீவா பத்தி என்ன நினைக்கிறீங்க அவர் ஜெயில்ல இருக்காங்களே அத பத்தி கொஞ்சம் கூட நீங்க யோசிக்கிறது இல்லையா என கேட்க ஜீவாவுக்கு அவங்க வீட்ல பார்த்துக்க அத்தனை பேர் இருக்காங்க எங்க அப்பாவுக்கு யார் இருக்கா நானும் எங்க அம்மாவை மட்டும் தானே அதனால தான் இங்கேயே இருக்கேன் என்பது போல் கூறுகிறார்.
அந்த சமயத்தில் பிரசாந்த் ஜனார்த்தனையை கொலை செய்ய உள்ளே போகிறார். அவர் உள்ளே போவதைப் பார்த்த மீனா ஓடி வருகிறார் உடனே பிரசாந்தை பார்த்து இங்க என்ன பண்றீங்க என கேட்கிறார் ஆனால் அதற்குள் ஜனார்த்தனன் ஆக்சிஜன் மாஸ்கை மாட்டி விடுகிறார் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் நான் பார்த்துக்கொள்ள மாட்டேனா நீங்க டிரைவரை வர சொல்லி நீங்க கிளம்புங்கள் என கூறுகிறார் பிரசாந்த்.
அடுத்த நாள் ஜீவா மற்றும் கதிர் கேஸ் வருகிறது அப்பொழுது கோர்ட்டில் அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஜீவா மற்றும் கதிருக்கு எதிராக இருவர் சாட்சி சொல்லுகிறார்கள் அதனால் ஜீவா மற்றும் கதிரின் ஜாமீன் மனு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த மாதம் இந்த கேஸ் நிலுவைக்கு வரும் என தீர்ப்பு சொல்லிவிட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் முல்லை அவரை விட்டு நான் போகமாட்டேன் அவரை விட மாட்டேன் என அழுது கொண்டிருக்கிறார். ஆனால் அனைவரும் சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார்கள் ஆனால் ஜீவா மீனா எங்கே என கேட்க குடும்பமே ஆடி போய் நிற்கிறது ஆனால் அவர் அப்பாவுக்கு துணையாக இருக்கிறார் என சொல்லி சமாளிக்கிறார்கள். அடுத்த காட்சியில் மீனா ஜனார்த்தனையிடம் புலம்பி கொண்டிருக்கிறார் என்ன நடக்குது என்று தெரியவில்லை என பேசிக்கொண்டு இருக்கிறார். பிறகு வெளியே செல்லும் பொழுது பிரசாந்த் அங்கிருந்து வருவதைப் பார்த்து ஸ்டச்சர் பின்னாடி மறைந்து கொள்கிறார்.
உள்ளே வந்த பிரசாந்த் ஜனார்த்தனனிடம் அவ்வளவு வேகமாக அடித்தேன் கத்தியால குத்தினேன் போய் தொலைய வேண்டியது தானே ஏன் இருந்துகிட்டு என் உயிரை வாங்குகிறாய்? நீ கண்ணு முழிச்சா நான் மாட்டிப்பேன் உன்னை போட்டு தள்ளி தான் ஆகணும் எத கட் பண்ணுனா சாவ என பேசிக்கொண்டே அனைத்தையும் எடுத்து விட்டு விடுகிறேன் என கூறுகிறார் அந்த சமயத்தில் மீனா ஒளிந்திருந்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார்.
உடனே நர்ஸ் உள்ளே வருகிறார் என்ன பண்றீங்க என கேட்க சும்மா பார்க்க வந்தேன் என கூறுகிறார். ஆனால் மீனா அனைத்தையும் கேட்டுவிட்டு டாக்டரிடம் ஓடிப்போய் பிரசாந்த் இனி எங்க அப்பா இருக்கும் ரூமுக்கு உள்ளே விடக்கூடாது ஒரு சின்ன issue போயிட்டு இருக்கிறது என கூறுகிறார். அதே போல் அங்கு வரும் நர்ஸ் அவர்களிடமும் பிரசாந்தை அனுப்பக்கூடாது எனக் கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.