முல்லை மீனாவால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை.! கதையை இழுக்க தான் இப்படி ஒரு நாடகமா..

pandian stores today episode october 14
pandian stores today episode october 14

pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ஜீவா இருவரும் தனத்திடம் போய் பேசுகிறார்கள் அப்பொழுது அண்ணன் போக்கு சரியில்லை மல்லியிடம் ஆறுதலாக பேசுகிறார் ஆனால் உங்களைப் பார்த்ததும் பம்புகிறார் அப்புறம் உள்ள வந்து உங்களிடம் சமாதான பேசுகிறார் இது எதுவுமே சரி இல்லையே நீங்க நல்லா தான இருக்கீங்க என கேட்கிறார்.

நான் நல்லா தான் இருக்கேன் எனக்கென்ன, இல்ல நீங்க பேசிட்டு இருக்கும்போதே உடனே எழுந்து வந்தீங்களே அது ஏன் என்று கதிர் கேட்க அதற்கு தனம் அப்போ ஒரு மாதிரியா இருந்துச்சு அப்பொழுது உள்ள வந்து யோசிச்சு பார்த்தேன் உங்க அண்ணன் வாழ்க்கையிலும் கொஞ்சம் கலகலப்பு இருக்கட்டுமே என பேசுகிறார்.

உடனே திரும்பத் திரும்ப ஜீவா மற்றும் கதிர் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாதுதானே சொல்லுங்க இல்லனா மல்லிய வெளில அனுப்பிச்சு விடலாம் என பேசுகிறார் அதற்கு இதையேதான் சொல்லிட்டு இருக்கீங்க ஆனா யாருமே செய்யல வாசல்வரை அழைத்துச் சென்று திரும்ப வீட்டுக்கு தானே கூட்டிட்டு வரீங்க என்ன பேசுகிறார்கள்.

செழியனை பார்க்க மீண்டும் வீட்டிற்கே வந்த மாலினி.. பார்க்கக்கூடாததைப் பார்த்து கேட்க கூடாததை கேட்டு நொந்து போன பாக்கியா – பாக்கியலட்சுமி

அடுத்த காட்சியில் மீனா முல்லை இருவரும் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது முல்லை ஐஸ்வர்யாவை கூப்பிட்டு பாத்திரத்தை எடுத்துக் கொடுக்க சொல்கிறார். அதற்கு ஐஸ்வர்யா மீனா ஆக்கா பக்கத்துல இருக்காங்களே எடுத்துக் கொடுக்க சொல்ல வேண்டியது தானே இதுக்கு நான் வரணுமா என பேசுகிறார். உடனே மீனா விடம் ஐஸ்வர்யா பாத்திரம் கேட்க  என்கிட்டயா சொன்னாங்க உன்கிட்ட தான சொன்னாங்க நீயே எடுத்து கொடு என பேச அப்ப ரெண்டு பேரும் பேசிக்க மாட்டீங்களா என ஐஸ்வர்யா கேட்கிறார்.

அதற்கு முல்லை யார் இப்ப பேசினா என்ன பேசாட்டி உனக்கு என்ன உன் வேலையை பாரு என பேசுகிறார், உடனே மீனா முல்லையை பார்த்து ரொம்ப ஓவரா பண்றீங்க முல்லை நான்தான் நான் பேசுனதுக்கு எல்லாத்த்துகிட்டையும்  மன்னிப்பு கேட்டுட்டேன் இல்ல அதுக்கு அப்புறம் ஏன் அந்த பிடிவாதம் என பேச அதற்கு மன்னிப்பு கேட்ட எல்லாம் சரியாயிடுமா என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் எங்க அப்பா இருந்த சூழ்நிலை என்ன நிலைமன்னு உனக்கே தெரியும் இல்ல என மீனா கூற  அதுக்காக சந்தேகப்படுவீங்களா என முல்லை கேட்கிறார்.

அந்த சமயத்தில் கதிர் மற்றும் ஜீவா வருகிறார்கள் உடனே சமாதானப்படுத்த முயற்சி செய்யும்பொழுது இருவரையும் உடனே தனத்தை அழைத்து வந்து பஞ்சாயத்து பேசலாம் என அழைத்து வர முல்லை மீனா இருவரும் சமாதானம் ஆகி கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஏதோ சண்டைன்னு கூட்டிட்டு வந்தாங்க என தனம் கேட்க இங்கே என்ன சண்டை நாங்க கத்திரிக்காய் பொரியல் வைக்கலாமா கத்திரிக்காய் குழம்பு வைக்கலாமா பேசிட்டு இருக்கோம் என பேசுகிறார்கள்.

வடக்கு, மேற்கு திசையில் ஏன் தலை வைத்து படுக்கக் கூடாது தெரியுமா.?

அடுத்த காட்சியில் முல்லை, மீனா, ஐஸ்வர்யா, தனம் ஆகியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முல்லை அக்கா மல்லி தனம் அக்கா வாழ்க்கைல விளையாடுவாங்க போல என பேசிக்கொண்டு இருக்க அந்த சமயத்தில் மூர்த்தி வருகிறார் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அப்படியே சென்று விடுகிறார். ஐஸ்வர்யா மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே என பேசுகிறார் மீனா என அனைவரும் நக்கல் அடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த காட்சியில் ஜீவா மாமனார் ஜனார்த்தனனை பார்க்கப் போகிறார் அப்பொழுது டாக்டரிடம் எப்பொழுது டிசார்ஜ் செய்ய போகிறீர்கள் என கேட்க இன்னைக்கே பண்ணிடலாம் ஆனா செக்கப் அடிக்கடி வரவேண்டும் என கூறுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.