pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் கதிர் மற்றும் ஜீவா இருவரும் ஜெயிலிலிருந்து வெளியே வந்து விடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பிரசாந்த் தான் ஜனார்தனனை கொலை பண்ண முயற்சி செய்தது என அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.
அதேபோல் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர், ஐஸ்வர்யா, மூர்த்தி என அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். குடும்பமே ஒன்று சேர்ந்து விடுகிறது இந்த நிலையில் ஜீவாவை போலீஸ் அடித்து வெளுத்து விட்டார் என்பது போல் மீனா அழுது கொண்டிருக்கிறார்.
ஆனால் போலீஸ் அடிக்கவில்லை என்ற உண்மையை ஜீவா கூறிவிடுகிறார். இப்படி அனைவரும் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். மற்றொரு பக்கம் முல்லை இனிமேல் கோபப்படக்கூடாது என கதிரிடம் சத்தியம் வாங்குகிறார் அப்படி கோபப்பட்டால் கட்டிப்போட்டு விடுவேன் என மிரட்டுகிறார்.
இந்த நிலையில் பிரசாந்த் ஆங்காங்கே கடனை வாங்கி வைத்துவிட்டு மல்லி தலையில் கட்டி விடுகிறார் மல்லி வீட்டை விட்டு கிளம்பி மூர்த்தி வீட்டிற்கு வருகிறார். மூர்த்தி வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு பிரசாந்த் சொந்தக்காரர்கள் இப்ப எங்கிருந்து வந்தாங்கன்னு தெரியல ஆளாளுக்கு ஏதாவது சொல்றாங்க.
கடங்காரங்கள் எல்லாம் கழுத்தை நெரிக்கிறாங்க எனக்கு என்ன பண்றதுனே தெரியல என புலம்பி கொண்டிருக்கிறார் உடனே அழுது கொண்டிருக்கும் மல்லிக்கு ஆறுதல் பேசுகிறார்கள். உடனே இந்த மாதிரி பிரச்சனை இருக்கும் நேரத்தில் மல்லி தனியாய் இருப்பது சரி வராது இங்கேயே இருக்கட்டும் என கூறுகிறார்கள் அதேபோல் தனமும் இங்கேயே இருக்கட்டும் என கூற முல்லை கடுப்பாகி சமையல் அறைக்கு செல்கிறார் உடனே மல்லி நான் வந்தது முல்லைக்கு பிடிக்கவில்லை நான் கிளம்புகிறேன் எனக் கூற தனம் நான் பேசிக் கொள்கிறேன் என உள்ள முல்லையிடம் பேசப்போகிறார்.
அதற்கு முல்லை கொஞ்சநஞ்ச பேச்சா பேசுறாங்க எல்லாத்தையும் பேசிட்டு இங்க வந்து நிற்பாங்க நாம ஏத்துக்கணுமா என்னால முடியாது என அழுத்தம் திருத்தமாக தனத்திடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதேபோல் மீனாவும் அவங்க ரொம்ப பேசினாங்க என்னாலயும் இத ஏத்துக்க முடியாது எனக் கூறுகிறார் உடனே ஐஸ்வர்யா மறுபடியும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிட போறாங்க எனக் கூற அதெல்லாம் எதுவும் வராது நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார் தனம். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.