Pandian stores : இன்றைய எபிசோடில் தனத்திற்கு பிரஸ் கேன்சர் என்ற உண்மையை மீனாவும் முல்லையும் ஐஸ்வர்யாவிடம் சொல்கின்றனர். இதைக் கேட்டு ஐஸ்வர்யா அழுது கொண்டு தனத்தை போய் அக்கா இப்ப எப்படி இருக்கீங்க ஏன் அக்கா என்கிட்ட மறைச்சீங்க, நான் உங்கள அக்கா அக்கான்னு கூப்பிடுறாங்க..
நீங்க என்ன தங்கச்சியா நினைக்கல இல்ல, எனக்கும் தெரிஞ்சிருந்தா நானும் உங்களை நல்லா பார்த்து இருப்பேன் என்று சொல்கிறார். பிறகு இப்ப என்னக்கா நான் பண்ணனும் என்று கேட்க நாங்க செக்கப்புக்கு போயிட்டு வரோம். அதுவரை வீட்டில் உள்ளவங்களை சமாளித்து விடு என்று சொல்லிவிட்டு முல்லை, தனம், மீனா மூன்று பேரும் செக்கப்புக்கு செல்கின்றனர்.
பிறகு கண்ணன் வீட்டுக்கு வருகிறான் எங்க வீட்டில் யாரும் இல்லை என்று கேட்க, அக்கா பாப்பாவுக்கு தடுப்பூசி போட போயிருக்காங்க என்று சொல்கிறார் பிறகு கண்ணன் எனக்கு டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு தூங்கும் பொழுது கண்ணன் போனை ஐஸ்வர்யா திருட்டுத்தனமாக எடுத்துட்டு வந்து வீடியோ எடுக்கிறார்.
அந்த வீடியோவில் கேன்சர் வந்தவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்க அதுலயும் சில பேர் அந்த நோயவும் வென்று இருக்காங்க அப்படி எங்க வீட்லயும் ஒருத்தவங்க இருக்காங்க என்று சொல்லிவிட்டார். இந்த வீடியோ பலருக்கும் பரவி உள்ளன. மீனாவின் அம்மாவிற்கு அவங்க பிரண்டு ஒருத்தவங்க போன் பண்ணி ஐஸ்வர்யா..
இதுபோல வீடியோ போட்டு இருக்கு பாரு என்று சொல்வதும் கலை அந்த வீடியோவை பார்த்துவிட்டு பாண்டியன் ஸ்டோர் வீட்டில் யாருக்கோ கேன்சர் இருப்பதாக ஐஸ்வர்யா வீடியோ போட்டு இருக்கா என்று ஜனார்தரன்னிடம் சொல்கிறார். மேலும் நம்ம பொண்ணு மீனாவுக்கு கேன்சர் இருக்குமா என்றும் யோசிக்கிறார்.
இதற்கு முன் ஒரு தடவை ஜனாதரனன் வீட்டில் கேன்சர் பற்றி பேசும்பொழுது இந்த பேச்சு நம்ம வீட்ல இருக்க கூடாது என்று மீனா சொன்னால் அப்பொழுது ஜீவாவிடமும் எனக்கு இந்த மாதிரி நோய் வந்தால் நீ என்ன பண்ணுவாய் என்று கேட்டார் அதனால் மீனாவுக்கு கேன்சர் வந்திருக்குமோ என ஜனாதரனனும் கலையும் நினைக்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.