Pandian stores : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கண்ணன் எப்ப வருவான் என்று வாசலிலே எதிர்பார்த்து காத்திருக்கிறார் அப்பொழுது தனம் எவ்வளவு நேரம் வெளியவே நிற்ப கண்ணன் வருவான் உள்ள வா என்று கூப்பிடுகிறார். பிறகு கொஞ்ச நேரம் கழிச்சு கண்ணனும் ஜீவாவும் வீட்டுக்கு வருகின்றனர்.
கேஸ் என்ன ஆச்சு என்று கேட்க விசாரணை எல்லாம் முடிஞ்சிடுச்சி ஆனா தீர்ப்பை ஒத்தி வச்சுட்டாங்க என்று ஜீவா சொல்கிறார். இதைக் கேட்ட ஐஸ்வர்யா ரொம்ப வருத்தப்படுகிறார் பிறகு அதெல்லாம் கண்ணனுக்கு சாதகமா தான் தீர்ப்பு வரும் என்று சமாதானப்படுத்துகின்றனர்.
மூர்த்தியும் சாப்பிடாமல் கண்ணன் வேலை என்னாச்சோ என்று சாப்பிடாமல் நினைத்துக் கொண்டு கோவிலில் இருக்கிறார் பிறகு கதிரும் கோவிலுக்கு வருகிறார். அடுத்து வீட்டில் டைனிங் ஹாலில் முல்லை, தனம், ஐஸ்வர்யா, மீனா நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது தனத்தின் குழந்தை அழுவதால் ஐஸ்வர்யா பாப்பாக்கு பீட் பண்ணுங்க என்று சொல்கிறார்.
உடனே தனம் முல்லையையும் கூப்பிட்டு ரூமுக்கு போகிறார். அதற்கு ஐஸ்வர்யா நீங்க பாப்பாக்கு ஃபீட் பண்ண போறீங்க அதுக்கு எதுக்கு முல்லை அக்கா என்று கேட்க ஒரு பேச்சு துணைக்கு தான் என்று முல்லையும் போகிறார். பிறகு மீனாவும் நானும் முல்லைக்கு பேச்சு துணைக்கு போறேன் என்று சொல்கிறார்.
இதனால் சந்தேகப்பட்ட ஐஸ்வர்யா உள்ள என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம் என்று ஐஸ்வர்யா அங்கு வருகிறார். அங்கு பார்த்தால் தனம் குழந்தைக்கு முல்லை ஃபீட் பண்ணிட்டு இருக்கிறார் இதை பார்த்து ஏன் என்று கேட்க தனம் நா ரொம்ப வீக்கா இருக்கேன் அதனால குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க அதனால தான் முல்லை ஃபீட் பண்றா என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு ஐஸ்வர்யா இதை தான் நீங்க மூணு பேரும் கூடி கூடி பேசி எல்லார்கிட்டயும் மறைச்சீங்களா என்று கேட்கிறார் அதற்கு மீனாவும் ஆமாம் என்று சொல்ல இது மட்டும் நீங்க மறைக்கல இன்னும் பெரிய விஷயம் ஒன்னு இருக்கு அது என்னன்னு நானே கண்டுபிடிக்கிறேன் என்று ஐஸ்வர்யா சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.