Pandian stores : இன்றைய எபிசோடில் ஜனாதரன் ஜீவாவை வாங்க மாப்பிள்ளை வீட்டுக்கு போகலாம் என கூப்பிடுகிறார் ஆனால் ஜீவா நான் வரமாட்டேன் என்று சொல்கிறார் பிறகு ஜனாதரன் அண்ணன் மாளிகை கட்டி வச்சிருக்கார் இல்ல, அதான் இங்கேயே தங்கிடலாம் என்று நினைக்கிறீங்க..
போல என்று சொல்லிவிட்டு பிறகு மீனாவை வாம்மா பாப்பாவ தூக்கிட்டு நம்ம போலாம் என்று கேட்க மீனாவும் என் புருஷன என்ன எல்லாம் பேசினீங்க அவருக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நானும் வர மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு ஜனாதரன் உங்க அண்ணன் வீட்டை விட்டு துரத்துனப்ப நான் தானே அடைக்கலம்..
கொடுத்தேன் இப்ப என்னமோ வரலைன்னு சொல்றீங்க என்று கேட்க, மீனா நான் அப்ப இருந்தே ஜீவாவை இந்த வீட்ல இருக்க வேணாம்னு தான் சொல்லிட்டு இருந்தேன் என்று சொல்கிறார். பிறகு மீனா நாங்க நல்லா இருக்கணும் என்று நினைத்தால் தயவு செய்து இந்த வீட்டை விட்டு கிளம்புங்க என அப்பா அம்மாவை சொல்கிறார்.
உடனே ஜனாதரன் அவரு பொண்டாட்டிய கூப்பிட்டு கிட்டு கிளம்புறாரு மேலும் பிரசாந்த், ஸ்வேதா, மல்லி போன்றோரும் கிளம்புகின்றனர். அடுத்து ஜீவாவும், மீனாவும் புது வீட்டில் இருப்பதை நினைத்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அப்பொழுது கஸ்தூரி கல்யாணத்தில் பிரிந்து கிரகப்பிரவேசத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர் என்றும் சொல்கிறார்.
பிறகு கிரகப்பிரவேசம் முடிந்து நைட் மூர்த்தி தனம் கிட்ட ரொம்ப சந்தோஷமா இருக்க போல என்று கேட்க.. ஆமா புது வீடு கட்டின சந்தோஷம் ஒரு பக்கம் ஜீவா நம்ம கூட இருக்கிற சந்தோஷமும் இன்னொரு பக்கம் என்று சொல்கிறார். அதேபோல் கதிரும் முல்லை கிட்ட நமக்குன்னு வீடு, ஒரு ரூம் அழகா இருக்குல்ல என்று சொல்கிறார் அதற்கு முல்லையும் ஆமாம் என சொல்கிறார்.
அடுத்து மீனா ஜீவா கிட்ட எங்க அப்பா இப்படி பேசினது ரொம்ப தப்பு முக்கியமா அந்த பிரசாந்த் வயசுக்கு ஏத்த மாதிரியா பேசினா அவன் பேசுனது ரொம்ப தப்புதான் என்று மீனா ஜீவாவிடம் சொல்லி வருத்தமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..