ஜீவாவை அவமானப்படுத்திவிட்டு கூலாக வீட்டுக்கு கூப்பிடும் ஜனார்த்தனன்.. அசிங்கப்படுத்தி அனுப்பிய மூர்த்தி – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு

Pandian stores
Pandian stores

Pandian stores : இன்றைய எபிசோடில் பிரசாந்த் என்னை தப்பா பேசினத்திற்கு என்கிட்ட மன்னிப்பு கேளு என ஜீவா சட்டையை பிடித்து கேட்டு கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து ஜீவாவின் அண்ணன் மூர்த்திக்கு செம்ம கோவம் வருகிறது உடனே பிரசாந்திடம் கையெடுறா என் முன்னாடியே என் தம்பி சட்டை புடிக்கிறியா என தள்ளி விடுகிறார்.

பிறகு ஜீவா என்ன தப்பா சொல்லிட்டான் ஏமாந்துராதீங்க என்கிற அக்கரையில் தானே அப்படி பேசினான் என மூர்த்தி பேசுகிறார். அதற்கு ஜனார்த்தனன் எப்படி என் சின்ன மாப்பிள்ளைய தப்பா பேசலாம் அவரு கரெக்டா தானே சொன்னாரு ஜீவாவுக்கு மளிகை கடையை தவிர வேற என்ன தெரியும் தெரியாத விஷயத்துல குறை சொல்றது தப்பு தானே..

இதுவரையும் அவர் என்னத்த உருப்படியா செஞ்சிருக்காரு என ஜீவாவை மட்டமாக பேசுகிறார். பிறகு மூர்த்தி இப்ப வந்த சின்ன மாப்பிள்ளை உங்களுக்கு பெருசுனா எனக்கு என் தம்பி ஜீவா முக்கியம் தான் இன்று ஜீவாவை மிக உயர்வாக பேசுகிறார். அடுத்து தனம் விசேஷ வீட்டில் பிரச்சனை வேண்டாம் என பிரசாந்தை வீட்டுக்கு போக சொல்கிறார்.

உடனே மல்லியும் என் பையன் இல்லைன்னா நானும் வீட்டுக்கு போறேன் என சொல்கிறார் அடுத்து ஜனார்த்தனனும் என் சின்ன மாப்பிள்ளைய கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்க.. நானும் வீட்டுக்கு போறேன் என்று மீனாவையும் வா, கயல தூக்கிட்டு வீட்டுக்கு போலாம் என்றும், ஜீவாவிடமும் நம்ம பிரச்சனையை வீட்ல போய் பேசிக்கலாம் வாங்க மாப்பிள்ளை என கூப்பிடுகிறார்.

இதற்கு மூர்த்தி என் தம்பியை என் முன்னாடியே இப்படி பேசுறீங்க நான் இல்லாத நேரம் எப்படி பேசுவீங்க அவன் என் கூட தான் இருப்பான் ஒங்க கூட வரமாட்டான் என சொல்கிறார். அதற்கு ஜீவா அண்ணன் எப்ப கூப்பிடுவார் என்று தான் இத்தனை நாள் எதிர்பார்த்தேன் நான் இனி அங்க வரல என ஜனார்த்தனனிடம் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு தனம், ஐஸ்வர்யா, கதிர் போன்ற அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.