Pandian stores : இன்றைய எபிசோடில் ஜனார்த்தனன் மற்றும் பிரசாந்த் இருவரும் குடித்து விட்டு பாண்டியன் ஸ்டோர் அண்ணன், தம்பிகளையும் குடிக்க கூப்பிடுகின்றனர் ஆனால் அவர்கள் யாரும் வேண்டாம் என சொல்லி விடுகின்றனர் பிறகு ஜனார்த்தனன் போதையில் பாட்டு பாடுகிறார் மேலும் மூர்த்தியையும் பாட சொல்லி கேட்கிறார்.
மூர்த்தி நான் பாடுனா என் தம்பிகள் பார்த்து சிரிச்சிடுவாங்க வேணாம் என்று சொல்கிறார். பிறகு தனம் வந்து கதிரை தனியாக கூப்பிட்டு ஜீவா இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போயிடுவான் போல, அவன இங்க தங்க வைக்க என்ன பண்றது என்று கேட்கிறார். அதற்கு கதிர் நான் ஜீவா அண்ணா கிட்ட பேசினேன் பெரியண்ணன் சொன்னா தான் தங்குவேன் என்று சொல்லுது என சொல்கிறார்.
மேலும் பெரிய அண்ணன் கிட்ட நம்ம யாரும் சொல்லக்கூடாதாம் அவரே கூப்பிட்டா தான் வருவேன் என்றும் சொன்னதாக கூறுகிறார். பிறகு ஜனார்த்தனன் மூர்த்தி கிட்ட நானும் சின்ன மாப்பிள்ளையும் சேர்ந்து ஒரு பிசினஸ் பண்றோம் அந்த பிசினஸ்ல பணம் போட்டா பணம் மழையா கொட்டும் என சொல்கிறார்.
முதல் தவணை 25 லட்சம் போட்டு இருக்கேன் எனவும் சொல்கிறார். இதைக் கேட்ட மூர்த்தி இந்த மாதிரி பிசினஸ்ல எவ்வளவு பேர் ஏமாத்துறாங்க அதெல்லாம் தேவையில்லை என்று சொல்கிறார், ஜீவாவும் நானும் அதைத்தான் சொன்னேன் நீங்க தனியா கஷ்டப்பட்டு சேர்த்த பணம் ஒரு இடத்துல கொடுத்து ஏமாந்துடாதீங்க..
பிரசாந்த்தா ஏதோ தெரியாம செஞ்சிட்டு இருக்காருன்னா நீங்களும் அவர் கூட சேர்ந்து இப்படி எல்லாம் பண்ணாதீங்க என சொல்கிறார் இதைக் கேட்டு பிரசாத்துக்கு ரொம்ப கோபம் வருகிறது. உடனே ஜனார்த்தனனும் உங்களுக்கு தெரியாத விஷயத்தை பத்தி தப்பா குறை சொல்லாதீங்க ஜீவா மாப்பிள்ளை என்று சொல்வதால் நீங்க எப்படியோ ஏமாந்துட்டு போங்க என்று ஜீவா கிளம்புகிறார்.
அப்பொழுது பிரசாந்த் ஜீவா கையை பிடித்து அப்படினா நான் என் மாமாவை ஏமாத்தறேன்னு சொல்றியா, எனக்கு அவர் மேல அக்கறை இல்லையா எனக்கும் ஸ்வேதாக்கும் கல்யாணம் ஆனதிலிருந்தே பார்க்கிறேன் நீங்க ரொம்ப தான் ஓவரா பண்றீங்க, பொழைக்க வழி இல்லாம மாமனார் வீட்ல உக்காந்துகிட்டு மாமாவோட மொத்த சொத்தையும் ஆட்டைய போடலாம்னு பாக்குறீங்க..
இப்ப அதுல இருந்து 25 லட்சம் போகுது என்றதும் உங்களுக்கு கோபம் வருகிறது, ஒழுங்கா என்ன பத்தி தப்பா பேசினதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேளுங்க என ஜீவா சட்டையை பிடித்து பிரசாந்த் கேட்கிறார். இதற்கு ஜீவாவுக்கு கோபம் வந்தாலும் பிரச்சனை ஏதும் வேண்டாம் என்பதால் கையெடு பிரசாந்த் என சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பிரசாந்த் கையை எடுக்காமல் மன்னிப்பு கேளுங்க என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார் இதை பார்த்து மூர்த்திக்கு படும் கோபம் வருகிறது. மேலும் தனம், மீனா, கதிர் போன்றோரும் ஓடி வந்து என்ன நடக்கிறது என்று பார்க்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.