ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு வந்த பேராபத்து.. உண்மையை கண்டுபிடித்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு

Pandian stores
Pandian stores

Pandian stores : இன்றைய எபிசோடில் மூர்த்தி வீட்டுக்கு வந்ததும் கண்ணனை இழுத்து ஏண்டா இப்படி பண்ணுன எனக் கோபப்பட்டு அடிக்கிறார். மூர்த்தி அடிப்பதை பார்த்து என்ன ஆச்சு என் கண்ணனை அடிக்கிறீங்க என தனம், மீனா, முல்லை, ஜீவா போன்ற எல்லோரும் மாறி மாறி கேட்கின்றனர்.

அதற்கு கஸ்தூரி அந்த வீடியோ விஷயம் தெரிஞ்சுச்சா, இந்த ஐஸ்வர்யா அந்த மேனேஜர் வீட்டுக்கு போய் வீடியோ எடுத்து அவ சேனல்ல போட்டு இருக்கா என்று சொன்னவுடன் அனைவரும் ஐஸ்வர்யா என்ன வீடியோ என்று கேட்பதற்கு அந்த மேனேஜர் தான் தப்பு பண்ணாங்க, அதனால அவங்க பண்ண தப்ப சொல்லி வீடியோ போட்டு இருக்கேன்.

இது மாதிரி வீடியோ போடுறதால நாட்டில் எவ்வளவோ விஷயங்களுக்கு ஞாயம் கிடைத்திருக்கு என ஐஸ்வர்யா சொல்கிறார். இதைக் கேட்டு கோபப்பட்ட மூர்த்தி இந்த போனால உங்களுக்கு நியாயம் கிடைச்சிடுமா என்று போனை புடுங்கி தூக்கி போட்டு உடைத்து விட்டு உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்க வீடியோ எல்லாம் எடுக்காத என்று திருந்தவே மாட்டியா என்று ஐஸ்வர்யாவை திட்டுகிறார்.

மேலும் கண்ணனிடம் நம்ம அதிகமா பணம் சேர்க்கல என்றாலும் மானம் மரியாதை சேர்த்து வைத்திருந்தோம். நீ லஞ்சம் வாங்கினதிலிருந்து நம்ப வீட்டு மானம் மரியாதையும் போச்சு வெளிய தலை காட்ட முடியல என்று திட்டி கொண்டிருக்கிறார். தனம் இப்படி வீடியோ போடறதால..

அந்த மேனேஜர் ஆளுங்க சும்மா இருப்பாங்களா என்று கேட்க கதிர் ஏற்கனவே அந்த மேனேஜர் ஆளுங்க வீடு புகுந்து வீடியோவை அழிக்க சொல்லியும், குடும்பத்தோட மன்னிப்பு கேட்க சொல்லியும் மிரட்டி இருக்காங்க. முடியாது என்று சொல்லி இருக்கேன் என கதிர் சொல்கிறார்.

கடைசியாக மூர்த்தி நாளையிலிருந்து இந்த குடும்பத்துக்கு ஒன்னால பிரச்சனை வந்தா தொலச்சிடுவேன் என்று சொல்லிக்கிட்டு போகிறார். அடுத்து கதிர், முல்லை இடம் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்று சொல்கிறார் அதற்கு முல்லை அக்காக்கு மாத்திரை கொடுத்துட்டு வந்துடுறங்க என்று சொல்லிவிட்டு தனத்திற்கு போய் மாத்திரை கொடுக்கிறார்.

தனம் அப்பொழுது வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அக்கா உங்களுக்கு தான் ஆபரேஷன் பண்ணி இருக்கு இல்ல நீங்க வேலை எல்லாம் செய்யக்கூடாது அக்கா போய் படுங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனை தூரத்தில் இருந்து கதிர் பார்த்துள்ளார்.

பிறகு கதிர் முல்லையை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்துக் சென்று உனக்கு என்னதான் பிரச்சனை, கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இருக்க திருச்சிக்கு நீ எக்ஸாம் எழுத போகல அதெல்லாம் பொய், அண்ணிக்கு ஆபரேஷன் ஆகிஇருக்குன்னு பேசிட்டு இருக்க என்னதான் நடக்குது உண்மையை சொல் என கதிர் துருவி துருவி கேட்கிறார்.

ஆனால் முல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாளித்துக் கொண்டிருப்பதை பார்த்து கதிர் உனக்கு தான் பொய் சொல்ல வரல இல்ல உண்மை என்னன்னு சொல்லு என கேட்பதற்கு கடைசியாக முல்லை அக்காவுக்கு நெஞ்சில கேன்சர் இருக்கு என்று சொல்கிறார் இதை கேட்டு கதிர் மிகவும் ஷாக் ஆகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.