Pandian stores : இன்றைய எபிசோடில் மூர்த்தி இந்த மாதிரி கேன்சர் நோய்க்கு நல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டாவே சரியாயிடும் என வெளிய சொன்னாங்க அதனால யாரும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார் பிறகு மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டு பிறகு மருந்து மாத்திரை மட்டும் ஒருவருடைய வியாதியை குணமாக்காது..
மன வலிமையும் தைரியமும் தேவை, இப்படி நம்ம எல்லோரும் ஒற்றுமையா தனத்தை பார்த்துகிட்டாவே சரி பண்ணிடலாம் என்று சொல்கிறார். அதற்காக மூர்த்தி ஒரு கதை சொல்லி அதன் மூலம் தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் நம்ம இந்த நோயை கடந்து வந்திடலாம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு தனமும் நீங்க இப்படி பேசுறது தான் எனக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கு என்று சொல்கிறார்.
அடுத்து கிச்சனில் மீனா, முல்லை, ஐஸ்வர்யா மூன்று பேரும் எப்படியோ இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு எல்லாம் சரியாயிட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது தனம் அங்கு வருகிறார் உடனே ஐஸ்வர்யா அக்கா அங்கே நில்லுங்க இந்த பக்கம் வந்து நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது என சொல்வதற்கு குழந்தைகளும் தூங்கிட்டாங்க நான் என்ன பண்றது என்று கேட்க வேணும்னா..
இங்க வந்து எங்க கூட பேசிட்டு இருக்கலாம் ஆனா ஒரு வேலையும் செய்யக்கூடாது என சொல்லி விட்டனர். பிறகு மாமா ஓகேவா என்று மீனா கேட்க, ஆம் பரவால்ல சரி ஆயிட்டாரு என்று தனம் சொல்கிறார். அடுத்து தனம் கண்ணனும் ஜீவாமும் எப்படி இருக்காங்க என்று கேட்கிறார் அவங்களும் சரியாயிட்டாங்க என்று சொல்கின்றனர்.
அடுத்து மூர்த்தி வீட்டு வாசலில் தனியாக நின்று யோசித்து கண்கலங்கி கொண்டிருக்கிறார். பிறகு ஜீவாவும் கண்ணனும் அங்கு வருகின்றனர். ஜீவா கதிரிடம் நீயே எங்க கிட்ட இருந்து மறைச்சிட்ட இல்லை என்று கேட்க நான் உங்ககிட்ட சொல்லனும் என்று தான் நினைச்சேன் அண்ணி தான் என்ன சொல்லவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதனால தான் என்று சொல்ல உடனே மூர்த்தி நடந்தது நடந்து போச்சு..
இனி நடக்க வேண்டியத பத்தி மட்டும் பேசலாம் என சொல்கிறார். பிறகு கண்ணன் வக்கீல் கிட்ட பேசின நாளைக்கு ஹீரிங் இருக்குன்னு சொன்னாரு, கோர்ட்டுக்கு போகணும், தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் தான் சொல்றாரு இருந்தாலும் பதட்டமா இருக்கு என கண்ணன் சொல்கிறார். உடனே ஜீவா நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் கோர்ட்டுக்கு போகலாம் என்று சொல்ல கதிர் நானும் வரேன் என்று சொல்கிறார்.
பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவும் வரேன் என்று சொன்னா என சொல்ல, மூர்த்தி அண்ணன் கிட்ட சொல்லிட்டு நம்ப எல்லோரும் போய்ட்டு வரலாம் என்று சொல்கிறார் ஆனால் கண்ணன் இது அண்ணன் கிட்ட சொல்ல வேணாம் போன தடவையே ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்துடுச்சு அதனால நம்ம போயிட்டு திருப்பி வந்ததுக்கு அப்புறம் பெரிய அண்ணன் கிட்ட சொல்லிக்கலாம் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது