உங்களுக்கு இந்த மாதிரி நடக்கும் என்று தெரிந்துதான் உண்மையை மறைத்தேன் என சொல்லும் தனம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு

Pandian stores
Pandian stores

Pandian stores :  சீரியல் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா நான் வீடியோல சொன்னதெல்லாம் பொய்யில்லை இந்த வீட்ல ஒருத்தங்களுக்கு கேன்சர் இருக்கு அது உண்மைதான் என்று சொல்கிறார். பிறகு தனம் அக்காவுக்கு தான் பிரஸ் கேன்சர் இருக்கு இது முல்லை அக்காவுக்கும் மீனா அக்காவுக்கும் ஏற்கனவே தெரியும் என்னால எல்லாம் அவங்க மாதிரி இருக்க முடியாது.

நான் ஏதாவது நல்லது நடக்கும் என்று தான் வீடியோ போட்டேன் என்று சொல்கிறார். இதைக்கேட்டு மூர்த்தி அதிர்ச்சியாகி என்ன தனம் இதெல்லாம் உண்மையா என்று கேட்க, எனக்கு ஒன்னும் இல்லை மாமா என்று தனம் சமாளித்துக் கொண்டிருக்கிறார் உடனே மூர்த்தி ஐஸ்வர்யா சொன்னதெல்லாம் பொய் என்றால் என் தலையில் அடித்து சத்தியம் பண்ணு உனக்கு ஒன்னும் இல்லை என்று கேட்ட தனத்தின் கையை எடுத்து மூர்த்தி தலையில் வைக்கிறார்.

ஆனால் தனம் சத்தியம் பண்ண மறுத்து கையை எடுத்ததால் இது உண்மைதான் என தெரிந்து கொண்டு மூர்த்திக்கு பிறகு நெஞ்சுவலி வந்து மயக்கம் போட்டுவிட்டார். மேலும் தனத்தின் அண்ணன் ஜீவா கண்ணன் போன்ற எல்லோரும் ஷாக்காகி என்ன அண்ணி என்று பதருகின்றனர். பிறகு மூர்த்தியை ரூமில் அழைத்துக் கொண்டு படுக்க வைக்கின்றனர். அடுத்து தனம் ஏன் சொல்லல என்று கேட்டீங்களே, இதற்காகத்தான்..

சொல்ல நான் இப்ப பார்த்தீங்களா மாமாவுக்கு நெஞ்சு வலி வந்துச்சு, இத நான் வீட்ல சொல்ல போய் அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பாப்பேனா, இல்ல மாமாவ பார்ப்பனா குழந்தைகளை பாப்பானா அதனாலதான் நான் சொல்லல என்று சொல்கிறார். மேலும் ஜீவாவும் கண்ணனும் அண்ணி இதை எங்களால் தாங்கிக்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என்று வருத்தப்படுகின்றனர். கடைசியாக மூர்த்தியிடம் தனம் எனக்கு கேன்சர் வந்தது உண்மைதான்.

கேன்சர் ஒன்னும் எனக்கு முதல் முறை வரல, எவ்வளவு பேருக்கு வந்திருக்கு ட்ரீட்மென்ட் எடுத்து பிழைத்து இருக்காங்க, எனக்கும் ஆப்ரேஷன் பண்ணி கட்டிய எடுத்தாச்சு, இன்னைக்கு கூட செக்கப்புக்கு போன அடுத்தடுத்த ட்ரீட்மென்ட் இருக்கு சரியாகிவிடும் எனக்கு ஒன்னும் ஆகாது என்று தனம் தைரியமாக சொல்கிறார். இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.