Pandian stores : இன்றைய எபிசோடில் கதிர் முல்லை தனம் மீனா நான்கு பேரும் ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்கு வருகின்றனர். வீட்டில் பார்த்தால் மீனாவின் அப்பா அம்மா தனத்தின் அண்ணன் முல்லையின் அப்பா என எல்லோரும் ஐஸ்வர்யா போட்ட வீடியோவை பார்த்து பதறி போய் வந்திருக்கின்றனர்.
மீனாவை பார்த்ததும் அவங்க அப்பா அம்மா உனக்கு ஏதாவது பிரச்சனையாமா ஏன் என்கிட்ட சொல்லல நீ ஏற்கனவே கேன்சர் பத்தி பேசி இருக்க என்று கேட்க மீனா அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்லை என்று சொல்கிறார். மேலும் இந்த வீட்டில் யாருக்கும் கேன்சர் இல்லை என்று மீனா சொல்லிவிட்டு..
ஐஸ்வர்யாவை ஏன் வீடியோ போட்ட என்ன திட்டுகிறார். பிறகு மீனா ஐஷு லைக்காக இப்படி வீடியோ போட்டுருப்பா என்று சொல்வதும் மூர்த்தி ஒரு லைக்காக இப்படியா வீடியோ போடுவ நாளைக்கு உனக்கு ஏதாவது பிரச்சனைனா அவங்கள வந்து கூட நிக்க போறாங்க என்று எல்லோரும்..
மாறி மாறி ஐஸ்வர்யாவை திட்டுகின்றனர் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா நான் ஒன்னும் பொய் சொல்லல நிஜமாவே நம்ம வீட்ல ஒருத்தங்களுக்கு கேன்சர் இருக்கு அதனால தான் அந்த வீடியோ போட்டேன் என்று சொல்கிறார் இதைக் கேட்டு மூர்த்தி ரொம்ப ஷாக் ஆகிறார்.
பிறகு தனம் அக்காவுக்கு தான் கேன்சர்,பிரஸ் கேன்சர் நீங்க எவ்வளவு கேட்டாலும் அவங்க வாய தொறந்து சொல்ல மாட்டாங்க என்ற உண்மையை ஐஸ்வர்யா எல்லோர் முன்னும் போட்டு உடைத்துள்ளார். இதை கேட்டு மூர்த்தி அதிர்ச்சியாகி நிற்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.