Pandian stores : இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா பேசிய வீடியோவை பார்த்து நம்ம பொண்ணுக்கு கேன்சர் வந்திருக்குமோ என்று நினைத்து கலையும் ஜனாதரனனும் பதறிப் போய் மீனாவுக்கு போன் பண்ணுகின்றனர் மீனா போன் எடுக்காததால் வீட்டுக்கே செல்கின்றனர். இதே போல் ஹோட்டலுக்கு வந்த ஜீவா முல்லையின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது ஜீவாவும் ஐஸ்வர்யா பேசிய அந்த வீடியோவை பார்ப்பதும் ஜீவாவும் மீனாவுக்கு கேன்சர் வந்திருக்குமோ என்று நினைத்து பதறுகிறார் அதை போல் முல்லையின் அப்பாவும் முல்லைக்கு ஏதாவது ஆயிருக்குமோ என்று நினைத்து பாண்டியன் ஸ்டோர் வீட்டுக்கு போகின்றனர்.
செக்கப்புக்கு போயிட்டு கதிர், முல்லை, மீனா, தனம் நான்கு பேரும் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது மீனா கண்ணன் ஐஷூ சேனல்ல இருந்து நோட்டிபிகேஷன் வந்திருக்கு என்று அந்த வீடியோவை எல்லோரிடமும் காண்பிக்கிறார்.
அதில் ஐஸ்வர்யா எங்கள் வீட்டில் ஒருவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார் என்று பேசியிருக்கிறார் இதை பார்த்த எல்லோரும் ஐஸ்வர்யா என்ன இப்படி பண்ணி வச்சிருக்கா என்று திட்டுகின்றனர் மேலும் தனம் மாமா இதை பார்த்து இருப்பாரா, என்ன சொல்றது என்று யோசிக்கிறார்.
தனம் நினைத்தது போலவே நடந்தது ஜகா இந்த வீடியோவை பார்த்துவிட்டு மூர்த்தியிடம் உங்க வீட்ல என்னதான் நடக்குது என்கிட்ட சொல்ல மாட்டியா யாருக்கு உடம்பு சரி இல்லை என்று கேட்கிறார் உடனே மூர்த்தி நீ சொல்றது ஒண்ணுமே புரியல என்னன்னு சொல்லு என்று கேட்க இந்த வீடியோவை பாரு என மூர்த்தியிடம் காண்பிக்கிறார்.
மூர்த்தி இந்த வீடியோவை பார்த்துவிட்டு தனத்திற்கு ஏதாவது ஆயிருக்குமோ என்று பதறி வீட்டிற்கு செல்கின்றனர். கதிர் எல்லோரையும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார் வீட்டின் உள்ளே பார்த்தால் மீனாவின் அப்பா அம்மா தனத்தின் அண்ணன் முல்லையின் அப்பா என எல்லோரும் இருக்கின்றனர். அவர்கள் ஐஸ்வர்யாவிடம் ஏன் இப்படி ஒரு வீடியோ போட்ட யாருக்கு என்னாச்சு என கேட்டு திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அப்பொழுது தனம் முல்லை மீனா இவர்களும் வருகின்றனர். மூர்த்தி தனத்திடம் இந்த வீட்ல யாருக்கு கேன்சர் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் தனம் அமைதியாக இருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது. தனம் இப்போதாவது உண்மையை சொல்வாரா என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.