மீனா ரூமில் இருந்த ஏசியை கழட்டி தனம் ரூமில் மாற்றிய குடும்பம்.. மூர்த்தி எடுத்த அதிரடி முடிவு – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு

Pandian stores
Pandian stores

Pandian stores september 09 : இன்றைய எபிசோடில் பாண்டியன் ஸ்டோர் வீட்டில் எல்லோருக்கும் சாப்பிட பார்லி கஞ்சி, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் சேலட் போன்றவை எடுத்துட்டு வந்து மீனா மற்றும் முல்லை வைக்கின்றனர் அதற்கு தனம் என் ஒருத்திக்காக நீங்க ஏன் இதை சாப்பிடணும் உங்களுக்கு புடிச்ச மாதிரி சாப்பிடுங்க என்று சொல்ல..

இதுவும் ஹெல்தியான சாப்பாடு தான் என்று எல்லோரும் சாப்பிடுகின்றனர். பிறகு நைட் ஜீவா மீனா கிட்ட உங்க அப்பா சூப்பர் மார்க்கெட் கடையோட மேனேஜரை பார்த்தேன் அவர் சொன்னாரு பிரசாந்த நம்பி அந்த பிசினஸ்ல நிறைய பணம் போட்டுக்கிட்டு இருக்காறாம், ஒங்க அப்பா கிட்ட கொஞ்சம் நீ பேசு என்று சொல்ல..

நான் எல்லாம் அவர்கிட்ட பேசமாட்டேன் நீயும் பேசாத நம்ம பேசினா அவரு தப்பா தான் நினைச்சு பாரு என்று மீனா சொல்கிறார். அடுத்த நாள் காலையில் தனத்திற்கு ஹீமோ ரேடியன் பண்ணனும் என்று சொல்கின்றனர் அதற்கு ஐஸ்வர்யா அதெல்லாம் பண்ணுனா நிறைய முடி கொட்டும் என்று சொல்ல, எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்று தனம் ஹாஸ்பிடலுக்கு போகிறார்..

அங்கு தனத்திற்கு ட்ரீட்மென்ட் நடக்கிறது ஹாஸ்பிடலுக்கு வெளியே கதிர், முல்லை, ஜீவா, மீனா, கண்ணன், ஐஸ்வர்யா, மூர்த்தி என குடும்பமே வந்து தனத்திற்காக நிற்கின்றனர். அப்பொழுது நர்ஸ் தனம் கிட்ட ஒங்க குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம் போல, உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருப்பாங்க போல என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு தனம் ஏன் கேக்குறீங்க என்று கேட்க..

எல்லாரும் கீழ வந்து உங்களுக்காக நிக்கிறாங்க என்று சொல்ல, தனமும் ஜன்னலால் அவர்களைப் பார்க்கிறார். அப்பொழுது கண்ணன் மூர்த்தி எல்லோரும் உனக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாத என சொல்கின்றனர். ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வீட்டுக்கு சென்று விட்டனர்.

வீட்டில் மீனா ரூமில் இருந்த ஏசியை கழட்டி தனம் ரூமில் மாற்றுகின்றனர்.. அதற்கு தனம் ஏசி எனக்கு வேணாம் மீனா ரூமில் இருக்கட்டும் என்று சொல்ல உங்களுக்கு தான் அக்கா இப்ப தேவை என்று அவரை சமாதானப்படுத்துகின்றனர் பிறகு மூர்த்தி எல்லா ரூம்லயும் ஏசி மாட்டிடலாம் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளார்..