pandian stores stalin muthu : சமீப காலமாக சினிமாவில் மிக எளிதாக நுழைந்து விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் மிக எளிதாக பிரபலமாகி வருகிறார்கள், அந்த வகையில் தங்களுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து பிரபலம் அடைந்து வருகிறார்கள்.
சீரியல்களில் பல பிரபலங்கள் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த சீரியல் விரைவில் முடிவடையா இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடிவிட்டது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில் கோபம், சண்டை, சந்தேகம் என பல பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் அதனை எப்படி சமாளித்து கூட்டு குடும்பமாக சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதுதான் சீரியலின் மையக்கரு.
இந்த சீரியலில் மூத்தா அண்ணனாக நடித்து வருபவர் ஸ்டாலின் முத்து இவர் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தனத்தின் கணவனாக, இந்த சீரியலை தாண்டி சினிமாவிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் வேறு யாரும் கிடையாது பாரதிராஜாவின் உறவுக்காரர் தான். இவர் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த 7c தொடரில் நடிகராக அறிமுகமானார் அதனை தொடர்ந்து பச்சைக்கிளி, சரவணன் மீனாட்சி, மாப்பிளை என பல தொடர்களுக்கு பெயர் போனவர்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்பொழுது சுஜிதா மற்றும் குமரன் தங்கராஜனுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இவரின் இயற்பெயர் ஸ்டாலின் முத்து. மேலும் ஸ்டாலின் முத்து செங்காடு பூமியிலே, கொம்பன், கொடிவீரன், மாரி 2 அருவம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் புகைப்படம் தான் பழசாக இருக்கிறது ஆனால் அம்மாவின் அன்பு என்றுமே பழசாகாது என கூறியுள்ளார்.