Pandian stores today episode november 06 : இன்றைய எபிசோடில் பாண்டியன் கடை கணக்கை அரசியை பார்க்க சொல்கிறார்.. அரசி கணக்கை பார்த்துவிட்டு ஆயிரம் ரூபாய் குறையுது என்று சொல்ல பாண்டியன் ஒவ்வொரு மகனையும் பார்க்கிறார் யாரும் நான் எடுக்கவில்லை என்று சொல்கின்றனர்.
பிறகு பாண்டியன் கதிரை அறைந்து நீ தான் எடுத்து இருப்ப உண்மையை சொல்லு என்று கேட்க நான் எடுக்கவில்லை என சொல்கிறார் அப்பொழுது செந்தில் என்னை மாட்டி விடாதே என்று கண்ணை காண்பிக்கிறார் அதனால் கதிர் எதுவும் சொல்லாமல் அடி வாங்கிக் கொள்கிறார்..
மீனா பண்ண காரியத்தை முத்து எப்படி மறப்பான்.. ஏத்துவிடும் விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
அடுத்து ரூமுக்கு வந்ததும் செந்தில் கதிரிடம் சாரி என்று சொல்ல சரவணன், வடிவேலும் நீ எதுக்கு கதிருக்கு சாரி சொல்ற என கேட்கின்றனர் பிறகு செந்தில் அந்த 1000 ரூபாய் பணத்தை நான் தான் எடுத்தேன் என்று சொல்ல வடிவேலு இதெல்லாம் ரொம்ப தப்பு இல்லையா, அப்பவே சொல்ல வேண்டி தானே இப்ப உன்னால கதிர் அடி வாங்கிட்டானே..
நான் இதைப் போய் மாமா கிட்ட சொல்றேன் என்று வடிவேலு கிளம்பும் பொழுது கதிர் மாமா சொல்ல வேணாம் விடுங்கன்னு சொல்லிவிட்டு பிறகு கதிர் செந்தில் இடம் இப்ப உனக்காக நான் அடி வாங்கிட்டேன் அடுத்த தடவை எனக்கு ஏதாவது ஹெல்ப்னா நீ பண்ணனும் என்று கேட்கிறார் அதற்கு செந்திலும் சரி ஓகே என்று சொல்கிறார்.
யோ செவனாண்டி நீ பெத்த மவள இது.! லதா பாண்டியனைப் பார்த்து உருகும் ரசிகர்கள்.?
பிறகு மீனா செந்திலுக்கு போன் பண்ணி காலையில உங்க அப்பாவ பார்த்ததும் அப்படியே என்ன விட்டுட்டு ஓடிட்ட இல்ல அதுக்கப்புறம் ஒரு போன் கூட பண்ண வில்லை என்று கேட்க நாளைக்கு அக்கா பொண்ணுக்கு காது குத்து இருக்கு அதனால அப்பா வேலை சொல்லியிருந்தார் அந்த வேலையா பிசியா இருந்துட்டேன் என்று சொல்கிறார்.. பிறகு மீனா நாளைக்கு உங்க வீட்ல விசேஷம் இருக்கா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று கேட்க..
நானே உன் கிட்ட சொல்லி கூப்பிடலாம்னு தான் இருந்தேன் என்று செந்தில் சொல்றதும் மீனா சரி நாளைக்கு நான் வரேன் என்று சொல்கிறார்.. அடுத்து முத்துவேல் வீட்டில் நள்ளிரவில் லைட் செட் எல்லாம் போட்டு தடைப்படலாக இருக்கின்றன இதை பார்த்த பாண்டியன் என்ன உங்க அண்ணன் இப்படி எல்லாம் பண்ணி இருக்காங்க என்று கோமதி கிட்ட பேசிக் கொண்டிருக்கிறார்..
அடுத்த நாள் காலையில் பாண்டியன் காது குத்து விழாவிற்கு கோவிலுக்கு சென்றுள்ளார் பிறகு அங்கு குழலியும் பாப்பாவை தூக்கிக் கொண்டு குடும்பத்துடன் அங்கு வந்துள்ளார் குழலி தனது தங்கை மற்றும் தம்பியை பார்த்து கிண்டல் அடித்து பேசிக் கொண்டிருக்கிறார்..
பிறகு பாண்டியன் பரவா இல்லையே நம்ம வீட்டு பங்க்ஷன்க்கு எல்லாரும் வந்துட்டு இருக்காங்க.. எப்படியும் முத்து வேல் வீட்டுக்கு யாரும் போக மாட்டாங்க இங்க தான் வருவாங்க என்று சந்தோஷத்தில் இருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.