திரும்ப வேலை கிடைச்ச சந்தோஷத்தில் கண்ணன்.. சின்ன மாப்பிள்ளையால் பிரச்சனையை சந்திக்க போகும் ஜனார்த்தனன்.. தடுப்பாரா ஜீவா – பாண்டியன் ஸ்டோர்

Pandian stores september 08
Pandian stores september 08

Pandian stores serial september 08 :  இன்றைய எபிசோடில் கண்ணன் கேஸ்  கோர்ட்டிற்கு வந்திருக்கிறது அதற்காக கண்ணன், ஐஸ்வர்யா, கதிர், ஜீவா நான்கு பேரும் வந்திருக்கின்றனர் அங்கு சுசிலா மேனேஜரின் தம்பிகள் வந்து உன் வேலை திரும்பி கெடச்சிடுமுன்னு நினைக்கிறியா அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மிரட்டுகின்றனர்.

பதிலுக்கு கதிரும் என் தம்பி தப்பு பண்ணல அவன் வேலை திரும்பி கிடைக்கும் என்று சொல்கிறார் ஆனால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இரண்டு பேரும் பதட்டமாகவே இருக்கின்றனர் பிறகு வக்கீல் நம்ம கேஸ் தான் வந்திருக்கு வாங்க என்று உள்ள கூட்டிட்டு போகிறார். கேஸ் முடிஞ்சதும் கண்ணன் வெளியே அழுதுகிட்டே வேகமாக ஓடி வந்து கதிரை கட்டிபிடிக்கிறார்.

பின்பு என் வேலை திரும்பி கிடைச்சிருச்சு என்று சந்தோஷமாக சொல்வதும் கதிரும் ஐஸ்வர்யாவும் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர். வீட்டிற்கு சென்றதும் காரை விட்டு வேகமாக இறங்கி வீட்டின் உள் ஓடி வந்து மூர்த்தியை கட்டிப்பிடித்து கண்ணன் அழுது கொண்டிருக்கிறார் பிறகு காலிலும் விழுகிறார் ஏன் என்ன ஆச்சு நாலு பேரும் எங்க போயிட்டு வரீங்க என்று கேட்க கோர்ட்டுக்கு தான் போயிட்டு வரோம் என்று சொல்கின்றனர்.

பிறகு வேலை திரும்ப கிடைசிச்சி என்று சொன்னதும் மூர்த்தி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இனிமே என் தம்பிய பத்தி ஊருக்குள்ள யாரு தப்பா பேசுறாங்க நான் பாத்துக்குறேன் என பேசுகிறார். அதற்கு கண்ணன் இனிமே நீங்க எல்லாம் பெருமைப்படுற மாதிரி நான் நடந்து கொள்கிறேன் என சொல்கிறார். கடைசியாக மூர்த்தியும் இது போன்று இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள சொல்கிறார்.

அடுத்து ஹோட்டலில் கதிர், ஜீவா, முல்லை உடைய அப்பா மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ஜனாதரனின் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஒருவர் அங்கு வருகிறார். அவர் ஜீவாவிடம் என்ன இப்பல்லாம் சூப்பர் மார்க்கெட்ல உங்களை பார்க்கவே முடியல என்று கேட்கிறார். அவர் அப்ப அப்படி பேசினார். நான் அங்கு இப்படி வர முடியும் என்று ஜீவா சொல்கிறார் பிறகு உங்க மாமா என்ன பண்றாருன்னு தெரியல..

வரவு செலவு கணக்கு எல்லாம் ஒன்னும் புரியல எல்லாம் சின்ன மாப்பிள்ளையால இப்படி பண்றாரு என்று அவர் சொல்வதால் சரி ஏதாவது பண்ணலாம் என ஜீவா சொல்கிறார்.  அதற்கு ஜீவா மீனா கிட்ட சொல்லி அவங்க அப்பா கிட்ட பேச சொல்றேன் என்று சொல்கிறார் அடுத்து பாண்டியன் ஸ்டோர் வீட்டில் எல்லோரும் சாப்பிடுவதற்காக உட்கார்ந்து இருக்கின்றனர்.

தனம் நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று சொல்ல அதெல்லாம் மீனா முல்லை எடுத்துட்டு வருவாங்க நீ உட்காரு என மூர்த்தி சொல்வதற்கு ஜீவா இவ்வளவு நாள் ஓடி ஆடி வேலை செஞ்ச உங்களை திடீர்னு உட்காருன்னு சொன்னா ஒரு மாதிரி இருக்கும் இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.