Pandian stores September 27 episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் முல்லை சாமி முன் உட்கார்ந்த அழுது கொண்டிருக்கிறார் அப்பொழுது தனம் ஆறுதல் கூறுகிறார். அந்த சமயத்தில் முல்லையின் அப்பா வருகிறார் கண்டிப்பாக மாப்பிள்ளை இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்திடலாம் என ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். உடனே அப்பாவை பார்க்க போன மீனா வீட்டிற்கு வருகிறார். அதற்கு முன்பு ஐஸ்வர்யாவின் சித்தி ஜனார்த்தனன் பிரசாந்த் என அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தார்.
மீனா வந்தவுடன் அனைவரும் பேசப் போகிறார்கள் ஆனால் யாரும் என்கிட்ட பேச வேண்டாம் என்பது போல் மாடிக்கு போய் அனைத்து துணிகளையும் பேக்கிங் செய்கிறார். ஆனால் ஐஸ்வர்யா மீனாவிடம் ஏன் அக்கா இப்ப துணி எல்லாம் எடுத்து வைக்கிறீங்க எனக் கேட்க கொஞ்சம் வெளியே போறியா என மீனா ஐஸ்வர்யாவிடம் கத்துகிறார். உடனே மாடியில் இருந்து கீழே வந்து ஐஸ்வர்யா, மீனா அக்கா என்கிட்ட ரொம்ப கத்துறாங்க வெளியே போறியான்னு சொல்றாங்க எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அடுத்த காட்சியில் மீனா கீழே வந்து கயல் பாப்பாவை தூக்கிக் கொண்டு இதெல்லாம் ஒரு டிரஸ்சா இப்படித்தான் டிரஸ் போடுவியா என்ன திட்டுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் கோபத்தை கயல் பாப்பாவிடம் காட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் நான் வீட்டை விட்டு போறேன் என்னை யாரும் தேடி வராதிங்க எனக்கு செய்ற நல்லது நினைச்சா கண்டிப்பா யாரும் என்னை தேடி வர வேண்டாம் என கூறி விடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர் குடும்பத்துக்காக செஞ்ச நல்லதெல்லாம் போதும் கொஞ்சமாவது எனக்கு மனசாட்சி இருக்கு இனிமையாவது எங்க அம்மா பக்கம் நிக்கணும்னு நினைக்கிறேன் என பேசுகிறார். முல்லை ஐஸ்வர்யா கண்ணன் என அனைவரும் மீனாவை இங்கேயே இருக்கும்படி கூற ஆனால் கேட்காமல் மீனா வீட்டை விட்டு செல்கிறார். அடுத்த காட்சியில் கோர்ட்டில் கேஸ் வருவதை நினைத்து மூர்த்தி யோசித்துக் கொண்டு புலம்பி கொண்டு இருக்கிறார் அந்த சமயத்தில் உள்ளே அடுத்த கேஸ் ஜீவா கதிர் கேஸ் வருகிறது.
மூர்த்தி உள்ளே போகாமல் வெளியே நின்று கொண்டிருக்கிறார் என் தம்பி கூண்டில் நிக்கிறத என்னால் பார்க்க முடியாது என கூறி விடுகிறார் உடனே தனத்தின் அண்ணன் ஓடோடி வந்து நமக்கு எல்லாமே எதிராக தான் இருக்கு பிரசாந்த் வாக்குமூலம் கொடுத்து இருக்கான் அப்புறம் மீனாவின் அம்மாவும் வாக்குமூலம் கொடுத்து இருக்காங்க எனக் கூறிக் கொண்டிருக்கிறார்.
உடனே தனம், முல்லை, கண்ணன் அனைவரும் கோர்ட்டுக்கு வருகிறார்கள் கண்ணன் வெளியே வந்து அந்த மேனேஜர் குடும்பமும் இப்போ வாக்குமூலம் கொடுத்துட்டாங்க எல்லாமே நமக்கு எதிரா இருக்கு என கூறுகிறார். அடுத்த காட்சியில் ரெண்டு பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை என வக்கீல் வந்து கூறுகிறார். உடனே முல்லை அவர்களிடம் பேச வேண்டும் என கூற அதெல்லாம் முடியாது என கதிர் மற்றும் ஜீவாவை அழைத்து செல்கிறார்கள் மற்றொரு பக்கம் மீனாவின் அம்மா உங்க அப்பா உயிரோட இல்லன்னா நானும் அவருடைய போய் சேர்ந்திடுவேன் நான் மட்டும் இருந்து என்ன பண்றது என புலம்பி கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் மீனா கல்யாணம் செய்து கொண்டது அவ கஷ்டப்பட்டது எல்லாத்தையும் நினைத்து ஜனார்த்தனன் வருத்தப்பட்டதாக மீனாவிடம் அவரின் அம்மா கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது