கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட ஜனார்த்தனன்.! கத்தி எடுத்து சொருகிய பிரசாந்த்.! ஜெயிலுக்கு போகும் ஜீவா, கதிர்.! பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

pandian stores september 17 promo
pandian stores september 17 promo

Pandian stores September 17 promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது வந்துள்ள ப்ரோமோவில் ஜனார்த்தனன் பிசினஸில் போட்ட பணத்தை கேட்டதால் பிரசாந்த் கத்தியால் குத்தி விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் மொத்த பணத்தையும் புதிய பிசினஸில் போட்டதால் வாங்கிய பொருளுக்கு பணம் தர முடியாமல் திண்டாடுகிறார் அதனால் பொருள் கொடுத்து அனைவரும் பணம் கேட்டு ஜனார்த்தனனை சுத்தி வளைத்து விட்டார்கள் இந்த சமயத்தில் தன்னுடைய மேனேஜருக்கு போன் செய்து வரச்சொல்லி இவர்களுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என கேட்க உடனே மேனேஜர் அதான் எல்லா பணத்தையும் எடுத்து பிசினஸில் போட்டு விட்டீர்களே எனக் கூறுகிறார்.

ஜனார்த்தனன் அதிர்ச்சி அடைகிறார் அதேபோல் ஜீவா நேரில் வந்து ஜனார்த்தனன் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த சமயத்தில் பிரசாந்த் வந்து நீ எதற்கு இங்கே வந்தாய் என சண்டை போடுகிறார் ஜீவாவிடம் அது மட்டும் இல்லாமல் ஜனார்த்தனனும் சின்ன மாப்பிள்ளை வைத்து நான் பிரச்சினையை பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க என மூஞ்சில அடித்தது போல் கூறியதால் ஜீவா கிளம்பி விடுகிறார்.

அடுத்த காட்சியில் பிரசாந்த் ஜீவாவிடம் சண்டை போடுகிறார் அது மட்டும் இல்லாமல் ஜனார்த்தனன் தான் உன்னை அடிக்க சொன்னது என பொய் சொல்லி விடுகிறார். இதனை போன் போட்டு ஜனார்த்தனனிடம் ஜீவா கேட்க வேறு ஏதோ கேட்க வருகிறார் என பிரசாந்த் பற்றிய உண்மையை கூற வருகிறார் ஜனார்த்தனன் அதற்குள் போனை கட் பண்ணி விட்டு இருவரும் வீட்டிற்கு போய் ஜனார்த்தனனின் மனைவியிடம் கத்தி விட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ஜனார்த்தனன் பிரசாந்திடம் என் பணம் இன்னைக்கு வந்து ஆகணும் என அதட்டி கேட்கிறார் பணத்தை கொடுக்க முடியாது என்ன பண்ண முடியும் என பிரசாந்த் ஜனார்த்தனையை பார்த்து கேட்கிறார், உடனே இருவருக்கும் சண்டை வந்து விடுகிறது உடனே ஜனார்த்தனன் கத்தியை கையில் வைத்துக்கொண்டு சண்டை போட போகிறார் அதற்குள் ஜீவா ஒரு கட்டையை எடுத்து கையில் அடித்து விட்டு கத்தியால் ஜனார்த்தனையை குத்தி விட்டு தன் கையையும் வெட்டிக் கொள்கிறார்.

அதேபோல் மேனேஜரையும் பிடித்து தள்ளி தலையில் அடிபட்டு மயக்கத்தில் கிடக்கிறார். ஆனால் போலீஸ் வந்தவுடன் ஜீவா மற்றும் கதிர் தான் ஜனார்த்தனனை தாக்கியது என பொய் சொல்லி விடுகிறார் உடனே போலீஸ் ஜீவா மற்றும் கதிரை அரெஸ்ட் செய்து கொண்டு போகிறார்கள் ஆனால் ஜீவா நான் எதுவும் பண்ணவில்லை என கூறுகிறார் மீனா கண்ணீரில் மிதக்கிறார்.