Pandian Stores Season 2 Coming Soon Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபத்திய எபிசோடில் பிரிந்த குடும்பமும் அனைத்தும் ஒன்று சேர்ந்து விட்டது. அது மட்டும் இல்லாமல் கதிர், ஜீவா இருவரும் ஜெயிலில் இருந்து வெளியே வந்து விட்டார்கள் ஜனார்த்தனன் பிழைத்துக் கொண்டார் தப்பு செய்த பிரசாந்த் மாட்டிக்கொண்டார் இப்படி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் விஜய் தொலைக்காட்சி அடுத்த சீசனை தொடங்க இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி தங்களுடைய சமூக வலைதளத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள் அந்த ப்ரோமோவில் மூர்த்தியின் மனைவி தங்களுடைய பிள்ளையை எழுப்புகிறார் ஆனால் யாரும் எழுந்திரிக்காமல் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பா வந்துவிட்டார் எனக் கூறியவுடன் அலறி அடித்த அனைவரும் எழுந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே முதல் சீசனில் அண்ணனாக இருந்த மூர்த்தி தற்பொழுது ப்ரோமோஷன் ஆகி அப்பாவாக மாறியுள்ளார். ஆனால் முதல் சீசனில் நடித்த சுஜாதா இரண்டாவது சீசனில் நடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். அதேபோல் முதல் சீசனில் தம்பிகளாக நடித்த கதிர், ஜீவா, கண்ணன் என யாருமே இந்த சீசனில் கிடையாது.
மேலும் இந்த ப்ரோமோவில் மூர்த்தி பிள்ளைகள் எழுந்து விட்டார்களா என கேட்க மூவரும் ஆஜர் ஆகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என ப்ரோமோவில் ஓடுகிறது.
இந்த நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இப்பதான் சீசன் 1 முடிந்தது என நிம்மதி அடைந்தோம் அதற்குள் சீசன் 2 கொண்டு வரவங்களா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஒரு சில ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் தொடர்கதையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறுகிறார்கள். மேலும் ஒரு ரசிகர் இதற்கு எண்டே கிடையாதா என கேள்வி எழுப்பி உள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரு ரசிகர் இந்த மாதிரி குடும்பம் எங்கே இருக்கிறது சீரியல் மட்டுமே பார்க்க முடிகிறது சந்தோஷமாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர் சீரியல் 2 வரட்டும் என பதிவிட்டுள்ளார்.
ஐயையோ திரும்பவும் முதல்ல இருந்தா இது அதே பழைய வீடு தானே என ஒரு ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்.