Pandian Stores Season 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபத்திய எபிசோடில் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்தது அது மட்டும் இல்லாமல் ஜனார்த்தனனை கொலை முயற்சி வழக்கில் ஜீவா மற்றும் கதிர் ஜெயிலுக்கு போனார்கள் பிறகு பிரசாந்த் தான் ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சி செய்தார் என தெரிய வந்து இருவரும் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
அதேபோல் பிரிந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் ஒன்று சேர்ந்தது. மீனா முல்லை இருவரும் மனக்கசப்பில் இருந்த நேரத்தில் இன்றைய எபிசோடில் இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்படி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஒவ்வொரு பிரச்சனையும் முடிந்து விட்டது.
அதேபோல் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் முடியை இருக்கிறது இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் இரண்டாவது பாகத்தை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பை இருக்கிறார்கள் இதற்கு ஒரு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகை ஒருவர் தங்களுடைய மகன்களை எழுப்புகிறார் அப்பொழுது யாரும் எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பா வருகிறார் எனக் கூறியவுடன் அனைவரும் எழுந்து விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் மூர்த்தி பிள்ளைகள் எழுந்து விட்டார்களா என கேட்க மூன்று நபர்களும் திடீரென்று வந்து நிற்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுஜாதா இந்த சீசன் 2வில் நடிக்கவில்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி இந்த இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார் என்பது தெரிகிறது இதோ வீடியோ.