பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் அனைவரையும் உட்கார வைத்து கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது தின்பண்டங்கள் அனைவரையும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் சரவணனுக்கு சப்போர்ட் செய்து பாண்டியன் பேசுவதால் ராஜிக்கு கோவம் வருகிறது.
உடனே சித்தப்பாவிடம் இதுவே கதிர் இந்த தப்ப செஞ்சிருந்தா எப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சி இருப்பாங்க என கூற என்னமா ராஜி என பாண்டியன் கேட்டு விடுகிறார் உடனே ராஜியின் சித்தப்பா இந்த தப்ப கதிர் பண்ணி இருந்தா சும்மா விட்டுருப்பீங்களா இந்நேரம் என்ன ஆட்டம் ஆடுவீங்க என பேசுகிறார்.
அதற்கு பாண்டியன் மழுப்புவது போல் இவனாட்சிக்கும் ஒரு தப்புதான் செஞ்சிருக்கான் அவன் எவ்வளவு தப்பு செஞ்சிருக்கான் தெரியுமா என பேசுகிறார்கள் உடனே அனைவரும் வாங்க சாப்பிட போகலாம் என சாப்பிட செல்கிறார்கள்.
அங்கு சாப்பாட்டை பார்த்துவிட்டு ராஜியின் சித்தப்பா ஒரு பீட்சா பர்கர் எதுவும் கிடையாதா என கேட்க அதுக்கு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கு அங்கு கிடைக்கும் என குத்தி காட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் சரவணன் சாம்பார் சூப்பராக இருப்பதாக கூற இது ஒன்னும் ஹோட்டல் கிடையாது நான் சமைச்சது அதனால கண்டிப்பா நல்லா தான் இருக்கும் என பேசுகிறார்.
மேலும் தங்கமயில் சாப்பிடாமல் ரூமில் இருக்க ராஜி மற்றும் மீனா இருவரும் சாப்பிடாமல் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தங்கமயில் வராமல் இருப்பதால் மீனா கேள்வி கேட்க தப்பு பண்ண குற்ற உணர்ச்சி இருக்க தான் செய்யும் தங்கமயில் சாப்பிடாததற்கு நாம என்ன பண்ண முடியும் பசிச்சா சாப்பிடுவாங்க என கூறிவிடுகிறார்.
இதனை கேட்ட ராஜி மற்றும் மீனா அதிர்ச்சி அடைந்து தங்க மயிலை அழைக்க செல்கிறார் தங்கமயில் நான் வர முடியாது எனக் கூற அவங்க எப்பொழுதும் ஒன்னாதான் இருக்காங்க நாம தான் தேவையில்லாம அடிச்சுக்கிறோம். நாம மூணு பேரும் ஒண்ணா இருக்கணும் நாங்க எப்பொழுதும் உனக்கு சப்போர்ட்டாதான் இருப்போம் என தங்கமயிலிடம் ராஜி கூறுகிறார்.
அதே போல் மீனாவும் அவரை சமாதானப்படுத்த ராஜி டியூஷன் விஷயம் பற்றி தங்கமயில் இடம் குத்தி காட்டுகிறார் அதனால் தங்கமயில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் என்னால எதையும் மறைக்க முடியாது அதனால்தான் உளறி விட்டேன் என கூறுகிறார். சரி வாங்க சாப்பிட போகலாம் என அழைத்து செல்கிறார்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது கோமதி மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராஜி அமைதியாக இருக்கிறார்
அதற்கு கோமதி ஏன் அமைதியாக இருக்க எனக் கேட்க அது என்ன எதுக்கெடுத்தாலும் கதிரை பத்தி தப்பு தப்பா பேசுறீங்க கதிர் ஒரு சின்ன தப்பு செஞ்சா போதும் உடனே வீட்ல உள்ள எல்லாரும் அவனையே திட்டுகிறீர்கள் என ராஜி கதிருக்கு சப்போர்ட் செய்ய கோமதி ஒரு காலத்துல புடிக்காத கல்யாணன்னு சொன்னா இப்ப என்னடான்னா மொத்தமா கதிர் உனக்கு தான் நினைச்சுக்கிட்டியா எனக்கு பங்கு இருக்கு என பேசுகிறார் அப்படியெல்லாம் இல்ல என ராஜி தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்க்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.