கதிர் மேல இம்புட்டு பாசமா இருக்கியே பாண்டியா அப்புறம் ஏன் இப்படி நடந்துக்கிற..? பாண்டியன் ஸ்டோர் பாசமான எபிசோட்..

pandian stores kathir
pandian stores kathir

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கோமதி மீனா ராஜு மூவரும் உக்காந்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தங்கமயில் சாப்பிடவில்லை என மீனா கூற அவ பசிச்சா சாப்பிடப்போறா உங்களுக்கு என்ன என கோமதி கேட்கிறார்.

என்னை இப்படி நடந்துக்கிறீங்க வீட்ல ஒரு ஆள் சாப்பிடல அதுவும் ஒரு பிரச்சனை நடந்திருக்கு அவளை சாப்பிட வைக்கணும்னு தோணலையா என பேசுகிறார்கள் நாங்க போய் கூப்பிட்டு வந்தாலும் நீங்க இந்த இட்லி என்ன விலை இந்த சாம்பார் என்ன விலை என்று கேட்டு கடுப்பேத்துறீங்க அப்புறம் எப்படி சாப்பிடுவாங்க என பேசுகிறார்கள்.

உடனே ராஜி இருந்தாலும் கதிரை திட்டிருக்கக் கூடாது என காதிர் மீது உள்ள அக்கறையில் பேசுகிறார். அதற்கு கோமதி நான் கல்யாணம் பண்ணிட்டு வந்த புதுசுல 450 ரூபாய்க்கு ஒரு புடவை வாங்கிட்டேன் அதனால என்கிட்ட மாமா பேசல ஒரு நாள் சாப்பிடாம கூட இருந்தேன் எனக் கூறுகிறார் இதெல்லாம் ஒரு பெருமையா என மீனா கேள்வி கேட்கிறார்.

மற்றொரு காட்சியில் மீனா செந்தில் இருவரும் ரொமான்ஸ் செய்கிறார்கள் அப்பொழுது சரவணன் வர தங்கமயில் சாப்பிடவில்லை என்பதை கூறிக் கொண்டிருக்கும் பொழுது சரவணனை அழைத்து மீனா சாப்பாடை போட்டு கொடுத்து கொண்ட கொடுங்க சாப்பிட வையுங்கள் என கூறுகிறார். அதற்கு சரவணன் அவ பசிச்சா சாப்பிட போற அவ தப்பு பண்ணுனா அதனால தான் இப்படி இருக்கா என பேசுகிறார்கள் அந்த தப்புல்ல உங்களுக்கும் பங்கு இருக்குதானே என்று மீனா கூறுகிறார்.

மற்றொரு பக்கம் பழனி தன்னுடைய அக்காவிடம் தலைக்கு என்ன வைப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மாமா பண்றது சரி இல்ல அண்ணன் எப்படி ராமன் லட்சுமணன் மாதிரி ஒன்னா இருக்காங்களோ அதே மாதிரி இங்க நம்ம மாப்பிளைங்க ஒண்ணா இருக்கணும் ஒருத்தன மட்டும் ஒசத்தி  பேசி ஒருத்தன தாழ்த்தி பேசி தேவையில்லாம அவங்க மனசுல வஞ்சத்தை விதைக்காதிங்க அதுக்கு அப்புறம் இவங்களும் அடிச்சிட்டு நின்னா அது நல்லாவா இருக்கும் என எடுத்து புரிய வைக்கிறார்.

சரவணன் தங்க மயிலுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு கொடுத்து சாப்பிட சொல்கிறார் ஆனால் தங்கமயில் எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் பாண்டியன் ரூமுக்கு வந்து கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் நீங்கள் கதிர இப்படி எல்லாரும் முன்னாடி அடிக்கிறது சரியில்ல என் புருஷனை எதுக்கு உங்க புருஷன் அடிக்கிறார் என்று ராஜி கேட்டால் நான் என்ன சொல்ல முடியும் என பேசுகிறார்.

அதற்கு பாண்டியன் அவனை பார்த்தாலே சின்ன வயசுல என்ன பாக்குற மாறியே இருக்கு அதே துடிப்பு அதே ஆர்வம் அதே அவசர புத்தி என கதிர் மீது பாசத்தை பொழிகிறார் அதுமட்டுமில்லாமல் நான் எப்படி அவசரப்பட்டு சில விஷயங்களை செஞ்சு எல்லாத்தையும் இழந்தோம் அதே மாதிரி என் மகன் எதை இழந்துட கூடாது அதனால தான் நான் அவன கொஞ்சம் அதட்டி வைக்கிறேன் என கூறுகிறார்.

அதெல்லாம் கரெக்ட் கொஞ்சம் தன்மையா பேச வேண்டி தானே எதுக்கு கதிரை மட்டும் அடிக்கிறீங்க திட்டுகிறீர்கள் என கோமதி கேள்வி எழுப்புகிறார். சரவணனை  ஒசத்தி பேசுறீங்க ஆனா கதிரை திட்றீங்க என பேச சரவணன் சம்பளத்தை வாங்கிட்டு வந்து அப்படியே என்கிட்ட கொடுத்துடுறான் அவனுக்கு ஒரு 25 ஆயிரம் செலவு பண்ண நான் தரமாட்டேனா அதுக்காக பணத்தை திருடனுமா என பாண்டியன் தன் பக்கமுள்ள நியாயத்தை எடுத்து கூறுகிறார்.

ஆனால் கதிர் அப்படி கிடையாது அவன் ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான் அவன் சேர்த்து வந்துச்சா 5000 கூட தான் அண்ணனுக்காக எடுத்துக் கொடுத்துட்டான் இந்நேரம் அவன் சாப்பிட்டானா தூங்கினான்னா எதுவுமே தெரியல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என கதிர் மீது இருக்கும் பாசத்தை கொட்டி தீர்க்கிறார் பாண்டியன் இதோடு எபிசோடு முடிகிறது..