Pandian Stores : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது, ஆனால் சமீப காலமாக அருவையாக சென்று கொண்டிருக்கிறது அதற்கு காரணம் சீரியலில் சுவாரசியம் குறைந்துவிட்டது சமீபத்திய எபிசோடில் தனத்திற்கு எப்பொழுது ஆபரேஷன் செய்வார்கள் என பல நாட்களாக இழுத்துக் கொண்டு இருந்தார்கள் ஆபரேஷன் முடிந்த பிறகு அனைவருக்கும் தெரிய வருகிறது.
அது மட்டும் இல்லாமல் புது வீட்டில் கிரகப்பிரவேசம் எப்பொழுது நடத்தலாம் என திட்டமிட்டு ஒரு வழியாக கிரகப்பிரவேசம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த கிரகப்பிரவேசத்தில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் இரண்டாவது மாப்பிள்ளை என அனைவரும் வந்துள்ளார்கள்.
அப்பொழுது ஜனார்த்தனன் திடீரென தன்னுடைய இரண்டாவது மாப்பிள்ளை சொன்ன பிசினஸில் பணத்தை போட்டால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் என பேசிக்கொண்டு இருக்க ஜீவா மை பிசினஸ்ல எம்புட்டு பேரு ஏமாத்துறாங்கன்னு தெரியல இதெல்லாம் செட் ஆகாது மாமா என ஜீவா கூறுகிறார். ஜீவா எழுந்து செல்லும்பொழுது இரண்டாவது மாப்பிள்ளை ஜீவாவின் சட்டையை பிடித்து அப்படின்னா நான் என் மாமாவை ஏமாத்துறேன்னு சொல்றியா என கோபப்பட்டு கத்துகிறார்.
மரியாதையாக மன்னிப்பு கேட்டால் தான் நான் விடுவேன் என ஜீவாவின் சட்டையை பிடித்து கத்துகிறார் உடனே மூர்த்திக்கு கோவம் வருகிறது கையை எடு பிரசாத் என கூறுகிறார் ஆனாலும் கையை எடுக்காததால் எட்ரா கைய என கையை எடுத்து தள்ளி விடுகிறார் என் கண்ணு முன்னாடியே என் தம்பி மேல கைய வைக்கிறியா என இரண்டாவது மாப்பிள்ளையை அடிக்கிறார் மூர்த்தி.
இப்ப என்ன தப்பா சொல்லிட்டாரு பிரசாந்த் மாப்பிள்ளை எதுலையாவது உன் தம்பி உருப்படியா செஞ்சி இருக்கானா என மூர்த்தியை பார்த்து கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் மீனாவிடமும் உன் புருஷன் என்னத்த உருப்படியா செஞ்சிருக்கான் என கத்துகிறார் ஜனார்த்தனன். என் கண்ணு முன்னாடியே உங்களுக்கு இரண்டாவது மாப்பிள்ளை ஒஸ்தின்னா எனக்கு என் தம்பி ஒசத்தி தான் என கோபத்துடன் ஜனார்த்தனையிடம் கத்துகிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.