தான் நடிக்கும் படத்தின் போஸ்டரை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

pandiyan-stores-1

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இவ்வாறு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் முல்லை கேரக்டர் தான்.

சித்ராவிற்கு பிறகு முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சிற்பிக்குள் முத்து சீரியலின் கதாநாயகி முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இருந்து விலகிப் பிறகு காவியா என்ன செய்து வருகிறார் என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்பதைப் பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதாவது தற்பொழுது நடிகை காவியாவுக்கு தொடர்ந்து சினிமாவில் படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் இதன் காரணத்தினால் தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து வெளியேறினார். இப்படிப்பட்ட நிலையில் இவர் முதன்முதலாக மிரள் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணிபோஜன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் தற்பொழுது இந்த படத்தின் போஸ்டரை காவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். திரில்லர் படமாக உருவாகி வரும் மிரள் திரைப்படம் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உருவாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னும் 20 நாட்களில் எடுத்து முடிக்க இருக்கின்றார்களாம் இந்த படத்தினை இயக்குனர் சக்திவேல் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிரள் திரைப்படம் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்டரை காவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

miral
miral

இந்த படத்தை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்த வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் நடிகை காவியா தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டதால் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.