Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் கலந்துக் கொள்ள இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. எனவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டால் யார் இவருடைய கேரக்டரில் சீரியலில் நடிப்பார் என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 6 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இதனை அடுத்து வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் மிகவும் பிரம்மாண்டமாக பிக் பாஸ் 7சீசன் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
கடந்த 6வது சீசன் சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் 7வது சீசனை முந்தைய சீசன்களை விட வித்தியாசமாக தொடங்க இருக்கின்றனர். அப்படி இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்கப் போகிறதாம். எனவே இதனால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து யார் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கு பெறப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில் பெரும்பாலும் சர்ச்சை பிரபலங்களை தான் களமிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்து வரும் குமரன் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிராக யார் நடிக்கப் போகிறார் என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் விரைவில் முடிய இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அப்டேட்டை விரைவில் குமரன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.