Pandian Stores : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் சிறிது காலத்தில் முடியப்போகிறது என சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியானது.
மேலும் இது தான் கடைசி எபிசோடு என பலரும் கூறிவந்த நிலையில் சீரியலிலும் அடுத்தடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளை பார்த்தால் முடிய போகிறது என்று தான் தோன்றுகிறது. ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முதலில் ஒன்று சேர்ந்தது ஆனால் தற்பொழுது ஜனார்த்தனன் தான் செய்யும் தவறுகளை உணர்ந்து பிரசாந்தை கேள்வி கேட்க பிரசாந்த் ஜனார்த்தனனை அடித்து விட்டு ஜீவா மற்றும் கதிர் மேல் பழியை போடுகிறார்.
இந்த நிலையில் ஜனார்த்தனன் விரைவில் கண் முழிக்க போகிறார் பிரசாந்த் போலீசில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது அதன் பிறகு இந்த சீரியலில் சுவாரஸ்யம் இல்லாததால் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தகா, பிரதீப் ஆண்டனி, நெக்சன், பாரதி கண்ணம்மா, வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐசு, விஷ்ணு விஜய், மாயா எஸ் கிருஷ்ணா, ஆகியோர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள் அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த சரவணா போட்டியாளராக களமிறங்கியுள்ளார் இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனாக நடித்து வருபவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதால்தான் இவர் கலந்து கொண்டுள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவணாவுக்கு வேறொரு நடிகர் நடிக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. மேலும் பிக் பாஸில் யோகேந்திரன் வாசுதேவன் விசித்ரா பாவா செல்லதுரை ஆகியோர்கள் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளார்கள்.
#பிக்பாஸ் இல்லத்தில்.. #SaravanaVickram Bigg Boss Tamil Season 7 #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/rv6WSve9wl
— Vijay Television (@vijaytelevision) October 1, 2023