விஜய் தொலைக் காட்சிகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்த தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருவதால் இந்த சீரியல்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.
தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஏராளமான திருப்பங்கள் வந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சுக்குநூறாக உடைந்து இருக்கிறது. அதாவது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இயற்கையாக இல்லாத காரணத்தினால் 5 லட்சம் செலவு செய்து செயற்கையாக குழந்தை பாக்கியம் பெரும் வகையில் சிகிச்சை செய்து வந்தார்கள்.
இதற்காக 5 லட்ச ரூபாய் கடன் வாங்க கடன்காரன் வீட்டு முன்பு வந்து கேட்கிறார். இதனால் மீனாவின் அப்பா பேச பிறகு அனைவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது எனவே கதிர் இதற்கெல்லாம் நான் தான் காரணம் இந்த ஐந்து லட்ச ரூபாயை எப்படியாவது அடைத்து விடுகிறேன் என்று கூறி விட்டு வீட்டை விட்டு முல்லையை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
இவ்வாறு விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் நான் அண்ணன் தம்பிகளில் கடைக் குட்டியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் சரவணன்.
இவருடைய தங்கைக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்று முடிந்தது மேலும் திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல்மீடியாவில் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சரவணன் தனது தங்கைக்கு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
இத்தனை வருடங்களாக தன்னுடன் சண்டை போட்டு வந்த எனது அன்பு தங்கை தற்போது திருமணம் ஆனதால் என்னைவிட்டு பிரிந்துவிட்டார் என்று கூறி தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெரிதளவில் பிரேம் ஒன்றை போட்டு அன்பு பரிசாக வழங்கியுள்ளார். இந்த பரிசை வாங்கும்போதே கண்ணனின் தங்கை கண்கலங்கி உள்ளார்.