திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! இனிமேல் அவருக்கு பதில் இவர்தான்.. டிஆர்பி அடி வாங்குமா.?

pandiyan-stores-20
pandiyan-stores-20

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல திருப்பங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கண்ணன் ஐஸ்வர்யா செய்த தவறினால் கதிர் ஜெயிலில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார் இதனால் முல்லை கதறி அழுது கொண்டிருக்கிறார்.

அதாவது கிரெடிட் கார்டு மூலம் ஐஸ்வர்யா கண்ணன் கணக்கு பார்க்காமல் லட்சக்கணக்கில் பொருட்களை வாங்கி வைத்திருக்கும் நிலையில் பேங்க் ஆபிஸர்கள் கண்ணனின் வீட்டிற்கு வந்து பணத்தைக் கேட்கின்றனர். இவ்வாறு அடிக்கடி நடந்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பணம் தர முடியவில்லை என்றால் உன் பொண்டாட்டியை அனுப்பு என கூற இதற்காக கோபப்பட்டு கண்ணன் அந்த ஆபிஸர்களை அடித்து விடுகிறார்.

மேலும் அவர்கள் இணைந்து கண்ணனை அடித்து விட இதனை தெரிந்துக் கொண்ட கதிர் கண்ணனை அழைத்து சென்று வீட்டில் இருக்கும் பெண்களை தப்பா பேசுவியா என நடுரோட்டில் அடிக்கிறார். இவ்வாறு இதனை மனதில் வைத்துக்கொண்டு ஆபிஸர்கள் கதிர் மீது புகார் அளிக்க போலீஸார்கள் கதிரை கைது செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு பக்கம் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கப் போவதனால் அனைத்தும் தயாராக இருக்கிறது ஆனால் கதிர் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதால் கண்ணன் வளைய காப்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துகிறார். இவ்வாறு கதிர் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை தெரிந்துக் கொண்ட ஜீவா உடனே வந்து எப்படியாவது கதிரை இன்னைக்குள் வெளியில் எடுக்க வேண்டும் இவனை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக இருப்பதாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு பரபரப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென ஜீவா கேரக்டரில் நடித்து வரும் வெங்கட் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு மேல் ஜீவா கேரக்டரில் மௌனராகம் 2 சீரியலில் வருணாக நடித்து வந்த நடிகர் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.