விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சகோதரர்களின் ஒற்றுமை என பல அம்சங்களை நிறைவு செய்யும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் குறிப்பாக இந்த சீரியல் கிராமப்புற மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பியான ஜீவாவின் மனைவியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார்.
மேலும் பொதுவாக சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமா தன்னுடைய யதார்த்த நடிப்பினால் இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இந்த சீரியலின் மூலம் சேர்த்துள்ளார்.
இதன் மூலம் இவர் தொடர்ந்து யூடிபில் வீடியோ பகிர்ந்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நடிகர்களுடன் டப்மாஸ் செய்வது, மேக்கப், டூர், லைவ் என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.
அனைத்து விதமான வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ரூபாய் 2 லட்சம் கொடுத்து ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். எனவே அதனை பிரிட்ஜ் டூர் என வீடியோவாக வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடமாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்பொழுது புதிதாக வாங்கியுள்ள பிரிட்ஜியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.
ஹேமா வாங்கி இருப்பது அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன இதனால் தான் அந்த ஃப்ரிட்ஜின் விலை எவ்வளவு என தெளிவாக கூறியுள்ளார். மேலும் இந்த ஃப்ரிட்ஜை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் கொடுத்து இருக்கிறார் செய்து முடித்துள்ளார் இதன் காரணமாக மீனாவிடம் தொடர்ந்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்.