Pandian Stores september 12 : இன்றைய எபிசோடில் மூர்த்தி வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் ஏசி வாங்கலாம்னு இருக்கோம் என்று சொல்ல அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும் வேண்டாம் என எல்லோரும் சொல்கின்றனர் ஆனால் மூர்த்தி எல்லாத்துக்கும் கணக்குப் பார்த்தா எப்படி, நம்ம சந்தோஷமா வாழனும்னா செலவு பண்ணி தான் ஆகணும்..
ஏசி போட்டா குழந்தைகள் நல்லா தூங்குறாங்க எவ்வளவோ செலவு பண்றோம் அதுல இதுவும் ஒரு செலவா இருந்தா போதும் என்று சொல்ல மாமா நீங்களா பேசுறது என்னால நம்பவே முடியல என மீனா சொல்கிறார்.. பிறகு மூர்த்தி கதிர் மற்றும் ஜீவாவிடம் இன்னைக்கு ஏசி வாங்கிட்டு வந்து எல்லா ரூம்லயும் மாற்றிடுங்க என்று சொல்லி விடுகிறார்.
அடுத்து ஜீவாவிடம் ஒருவர் உங்க அண்ணன் கூட சேர்ந்துட்டீங்க போல என்று கேட்க ஆமாம் என்ன சொல்கிறார்.. பிறகு உங்க மாமனார் பண்றதே சரியில்ல இருக்கிற எல்லா காசையும் அந்த ஒரு பிசினஸ்ல போட்டுக்கிட்டு இருக்காரு அந்த பிசினஸ நம்பி நிறைய பேரு ஏமாந்துகிட்டு இருக்காங்க உங்க மாமனார் கிட்ட பேசுங்க என்று அவர் சொல்லிவிட்டு போகிறார்.
பிறகு ஜீவா ஜனாதரனை பார்த்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல பிரசாந்த் மாப்ள கூட பண்ற பிசினஸை தவிர வேற எதுவா இருந்தாலும் பேசுங்க மாப்பிள்ளை என்று சொல்ல ஜீவா நான் அதை பற்றி தான் பேச வந்தேன் அதுல நிறைய பேரு ஏமாந்துட்டு இருக்காங்க..
அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல.. இத நீங்க என் கூட இருந்து சொன்னாலும் பரவாயில்ல நீங்க தான் உங்க அண்ணன் கூப்பிட்டதும் என்ன விட்டுட்டு போயிட்டீங்க இல்ல.. உங்களுக்கு என்ன என் மேல அக்கறை எனக்கு புடிச்சிருக்கு அந்த பிசினஸ் நான் பண்றேன் இத பத்தி இனிமே பேசாதீங்க என்று ஜீவாவிடம் சொல்லிவிட்டு ஜனாதரன் கிளம்பிவிட்டார்.
அடுத்து பாண்டியன் ஸ்டோர் வீட்டிற்கு கதிர் மூன்று ஏசி வாங்கிட்டு வந்து விட்டார். அதனை மீனா முல்லை ஐஸ்வர்யா எல்லோரும் ஆசையாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மீனா மட்டும் என்னால இதை நம்பவே முடியல நம்ம வீட்டுக்கா வாங்கிட்டு வந்து இருக்கோம் என்று ஆச்சரியப்படுகிறார் அப்பொழுது கஸ்தூரி அங்கு வருகிறார்.
அவர் என்ன ஏசி இங்க இருக்கு எப்படியும் நீங்க வாங்கி இருக்க மாட்டீங்க, ஏன் இங்கே இருக்கு என்று கேட்க நாங்க தான் வாங்கி இருக்கிறோம்.. ஏற்கனவே ஒரு ஏசி அண்ணி ரூம்ல போட்டாச்சு அதனால தான் மீதி மூணு ரூமுக்கும் ஏசி போடணும்னு அண்ணன் சொன்னாரு என்று கதிர் சொல்ல அப்ப தனத்துக்கு எது கிடைச்சாலும் இந்த வீட்ல எல்லோருக்கும் கிடைச்சிடும் என்று கஸ்தூரி சொல்கிறார்.
பிறகு அடுத்த நாள் காலையில் கண்ணன் மறுபடியும் வேலைக்கு போகிறார்.. அதற்காக கதிர் நேற்று நைட் புது சட்டை கண்ணனுக்காக வாங்கி கொடுத்திருக்கிறார். எல்லோரும் சாமி கும்பிடுகின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்தது..