Pandian stores : விஜய் டிவியில் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை கடந்து இன்றும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஃபேவரட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால்..
இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இருக்கும் நான்கு அண்ணன் தம்பிகளுக்குள் என்னதான் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அதை அப்போதே மறந்து பாசத்துடன் ஒருவருக்கொருவர் சேர்ந்து இருப்பது இந்த சீரியலுக்கு இருக்கும் தனி அழகு..
இவர்களை போலவே இந்த வீட்டு மருமகள்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மருமகளாக தனம் கதாபாத்திரத்தில் சுஜிதா என்பவர் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகி தற்போது சீரியல் நடிகையாக இருந்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சுஜிதாவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ரோல் ஆகும். இந்த நிலையில் சுஜிதாவிற்கு திடீரென சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தயாரிப்பாளர் ஏனென்றால் அண்மையில் சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகுவதாக கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் இந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி அவருக்கு பதில் வேறு ஒருவர் மாற்றப்பட்டால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் பாண்டியன் ஸ்டோர் குழுவிற்கு வந்துள்ளது. அதனால் சுஜிதாவை சமாதானப்படுத்தி சம்பளத்தை மட்டும் அதிகரித்து நீங்களே நடிங்கள் என்று கூறி இருக்கின்றனர்.