விஜய் தொலைக்காட்சி என்றாலே பாண்டியன் ஸ்டோர்ஸ்தான் என்று கூறும் அளவிற்கு அருமையான ஒரு நாடகம் இது. இந்த நாடகத்தில் எந்தவித சூழ்ச்சி செய்யும் கதாபாத்திரங்களும் இல்லை என்பது இந்த நாடகத்தின் தனிச்சிறப்பு. தற்போது இந்த நாடகத்தில் முல்லையை கதிர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் இவர்களுக்கு இடையே காதல் அதிகரித்தது அதனால், அவர்களுக்குள் நடக்கும் ரொமான்ஸினால் நாடகம் ஒரு பக்கம் மிக அழகாக சென்று கொண்டிருக்கிறது.
ஏன்,மேலும் விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் அதிக விருதுகளை பெற்ற நாடகம் என்றால் அதில் இதுவும் ஒன்று. இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி மிக அருமையாக நடித்து இருப்பார்கள்.
அப்படி இருக்க, இந்த நாடகத்தில் தனம் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா, தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் போன்றவற்றிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலமானவர், ஏனென்றால் இவரது அழகும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரக்கூடியது.
இந்த நிலையில்தான் தெலுங்கானாவின் ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களால் சிறந்த ரோல் மாடல் என்னும் விருது தனத்திற்கு வழங்கப்பட்டது. தனம் தனக்கென்று தனி யூடியூப் சேனலை வைத்துள்ளார்அதில் அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சில தருணங்களை வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோக்களையும், இல்லத்தரசிகளுக்கு தேவையான விஷயங்களைப்பற்றிய வீடியோக்களையும் ஷேர் செய்வார்.
இப்படி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளுநரின் கையால் விருது வாங்கும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை தொடர்ந்து,ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.