பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்திய எபிசோடில் குமரவேலை சுகன்யா தான் வரவழைத்து அரசு இடம் பேச வைக்கிறார் ஆனால் அதனை வீணா கண்டுபிடித்து விடுகிறார் உடனே கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரே நடிப்பாக நடித்து விடுகிறார் சுகன்யா.
ஆனால் மீனா அதனை நம்புவது போல் தெரியவில்லை, ஆனால் சுகன்யா வீட்டிற்கு வந்து மீனா தன்னை கண்டபடி திட்டியதாக கூறுகிறார் ஆனால் பழனி அதனை கொஞ்சம் கூட நம்பவில்லை மீனா அப்படிப்பட்ட பெண்ணை கிடையாது எனக் கூற அதற்கு சுகன்யாவுக்கு கோவம் வருகிறது.
ரூமுக்கு சென்ற சுகன்யா பழனியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீ என்ன மீனாவுக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ற உங்களுக்குள்ள என்ன இருக்கு ஏன்னா தப்பு தப்பாக பேச பழனிக்கு கோவம் வருகிறது. அவளுக்கு நான் சித்தப்பா தேவையில்லாம பேசாத எனக் கூற அதற்கு சுகன்யா சொந்த சித்தப்பா கிடையாது தூரத்து சொந்தம் தானே பேசுகிறார்.
இந்த நிலையில் புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பழனிக்கு அனைத்து விஷயமும் தெரிய வருகிறது பாண்டியன் அனைத்தையும் பழனியிடம் கூறுகிறார். இதனால் பழனி சுகன்யாவிடம் சென்று நீ தான் அந்த குமார அரசியுடன் சேர்த்து வைக்க பார்க்கிறாயா? என கேள்வி எழுப்புகிறார்.
எங்க அந்த மீனா பத்தி வச்சாலா உங்ககிட்ட எனக் கேட்க மீனா சொல்லல மாமா தான் சொன்னாரு என பேசுகிறார். உடனே பழனியையும் மீனவையும் தவறாக பேச பழனி கோபப்பட்டு சுகன்யாவை அறைந்து விடுகிறார் உடனே அலறி அடித்துக் கொண்டு கத்தி கூச்சல் போடுகிறார்.
ரூமுக்குள் பாண்டியன் மற்றும் கோமதி என்ற அனைவரும் வந்து விடுகிறார்கள் அப்பொழுது சுகன்யா ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம தொடக்கூடாதுன்னு கொஞ்சம் கூட உங்களுக்கு தெரியாதா என பழனி மீது அபாண்டமாக பழியை போடுகிறார் இதனால் பாண்டியன் அதிர்ச்சி அடைந்து பழனியை திட்டுகிறார் பழனி இல்ல மாமா என சொல்வதற்குள் பாண்டியன் திட்டி விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.