பாண்டியன் குடும்பத்துக்கு குலசாமியாக இருக்கும் மீனாவையே போட்டுக் கொடுத்த சூனியக்காரி சுகன்யா.. உன் பருப்பு வேகாதும்மா

pandian stores 2 latest april 1
pandian stores 2 latest april 1

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் அரசியை நான் காலேஜில் விட்டு விட்டு செல்கிறேன் என கூறுகிறார். அந்த சமயத்தில் சூனியக்காரி சுகன்யா உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் ஆட்டோவில் கொண்டு விட்டு வருகிறேன் என பேச மீனாவுக்கு நீங்க எங்கிருந்து வரீங்க என கேட்க அக்கா வீட்டில் இருந்து என சுகன்யா கூறுகிறார்.

அப்பனா பரவாயில்ல நீங்களே கொண்ட விடுங்க என செந்திலிடம் மீனா கூறுகிறார். உடனே சூனியக்காரி சுகன்யா ஏன் மீனா என் மேல உனக்கு சந்தேகமா நான் என்ன அரசியை தொலைச்சா போட போறேன் என பேச அதற்கு கோமதியை பார்த்து இங்க பாருங்க அத்தாச்சி நான் கொண்ட விடுறேன் என பேச சரி நீ கொண்டு விடு மத்தவங்க எல்லாம் அவங்க வேலையை பார்க்கட்டும் என பேசுகிறார்.

அரசியை அழைத்து செல்கிறார் சுகன்யா அந்த சமயத்தில் மீனாவிற்கு சுகன்யா மீது சந்தேகம் வருகிறது உடனே செந்திலை நீங்கள் கிளம்பாதிங்க நானும் வரேன் அஞ்சு நிமிஷத்துல என்ன விட்டுட்டு செல்லலாம் நாம் அரசி காலேஜ்ல போய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என பேசுகிறார் அதற்கு செந்தில் அங்கு எதுக்கு நாம போய்க்கிட்டு என பேச நீங்க வாங்க நான் சொல்கிறேன் நான் சொல்வது உண்மைதான் என அழைத்துச் செல்கிறார்.

அரசி காலேஜுக்கு சென்ற சுகன்யா மற்றும் அரசி வா டீ குடித்து விட்டு செல்லலாம் என கூற எனக்கு டீ வேண்டாம் அப்படியே குடிக்கணும் என்றாலும் கேண்டினுக்கு போகலாம் என கூற அப்பொழுது குமரவேல் வருகிறார் அரசிடம் பேச முயற்சி செய்யும்பொழுது நான் என் அப்பா அம்மா மீது சத்தியம் பண்ணி விட்டேன் அதனால் கண்டிப்பாக பேசமாட்டேன் சத்தியத்தை மீறுகிற பொண்ணு நான் கிடையாது என பேசுகிறார்.

அதற்கு சுகன்யா அவன் ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கான் உன்கிட்ட ஏதோ பேசணும் என்று சொல்கிறான் என்னன்னு கேளு எனக் கூற அப்ப எல்லாமே உனக்கு தெரியும் தானே என பேசுகிறார் அதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது என சுகன்யா சமாளிக்கிறார் அந்த சமயத்தில் செந்தில் மீனா இருவரும் வர. குமரவேல் சட்டையை பிடித்து செந்தில் என்ன பேசணும் என்கிட்ட பேசு என சண்டை போடுகிறார் இல்ல மச்சான் சண்டை வேணாம் என குமரவேல் கூறுகிறார்.

உடனே ஒழுங்கா ஓடிடு இல்லன்னா அடிச்சு மூஞ்சி மொகரையெல்லாம் உடைச்சிடுவேன் என பேசுகிறார் செந்தில், குமரவேல் வெளியே செல்கிறார் உடனே மீனா சுகன்யாவை பார்த்து எல்லாத்துக்கும் காரணம் நீங்கதானா சுகன்யா குமார வர சொன்னீங்களா இதை உடனே மாமா கிட்ட போய் சொல்கிறேன் என பேசுகிறார். அதற்கு நான் ஒன்றுமே செய்யல என்னை நீ போட்டுக் கொடுக்க பாக்குறியா எல்லாரும் என்ன தப்பா நினைக்க வேண்டும் என்று நினைக்கிறாயா என சூனியக்காரி சுகன்யா கேட்கிறார்.

அடுத்த காட்சியில் சூனியக்காரி சுகன்யா வீட்டிற்கு வந்து பாண்டியனிடம் மீனா தப்பு தப்பா பேசியதாக கூறுகிறார் குமரவேல் வந்ததையும் கூறுகிறார் இதனால் பாண்டியன் கோபப்படுகிறார் உன் அண்ணன் மகனுக்கு இன்னும் அடி தேவையா என கோமதியை பார்த்து கேட்கிறார் இதை நானே பார்த்துக்கொள்கிறேன் என பாண்டியன் பேசி விட்டு செல்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.