Pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் சமீபத்திய எபிசோடில் கதிர் ஜீவாவை போலீஸ் அரெஸ்ட் செய்து உள்ளே வைத்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் ஜாமீன் கூட கொடுக்காமல் இருக்கிறார்கள் அதற்கு காரணம் கதிர் ஜீவாவுக்கு எதிராக சாட்சி சொல்லியுள்ளார்கள் அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பதால் என்ன செய்வது என்று புரியாமல் மூர்த்தி குழப்பத்தில் இருக்கிறார்.
அதேபோல் மீனாவை பார்க்க சென்ற முல்லை அசிங்கப்பட்டு வீடு திரும்புகிறார் கதிர் அடித்திருக்க மாட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் என மீனா கேட்டதால் முல்லை மனமுடைந்து வீட்டிற்கு வந்து விடுகிறார். ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என மொத்த பாண்டியன் ஸ்டோர் குடும்பமும் காத்துக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் பிரசாந்த் திருட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
ஜனார்த்தனன் கண் விழித்தால் கண்டிப்பாக பிரசாந்த் ஜெயிலுக்கு செல்வார் என்பது அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் ஜனார்த்தனனை அடித்தது பிரசாந்த் தான் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது பிரசாந்த் எழுந்து மீனா ஹாஸ்பிடலில் இருந்து மருந்து வாங்க செல்கிறார் அந்த சமயத்தில் இதுதான் சரியான நேரம் என ஜனார்த்தனனை கொலை செய்ய பிரசாந்த் முயற்சி செய்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக மீனா திடீரென ஜனார்த்தனன் இருக்கும் அறைக்கு உள்ளே வருகிறார் பிரசாந்தை பார்த்த மீனா என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்க சும்மா வந்தேன் மாமாவை பார்த்துட்டு போகலாம் என சொல்லி சமாளிக்கிறார் ஆனால் மீனாவிற்கு பயங்கர சந்தேகம் வந்துவிட்டது.
உடனே பிரசாந்தை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் பிரசாந்த் எப்பொழுது டிஸ்சார்ச் ஆகுவார் என கேட்டுக் கொண்டிருக்க அவர் எப்பவோ டிஸ்சார்ச் ஆகிவிட்டார்? எதற்காக அங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என கூறுகிறார்கள் உடனே மீனா பதறி அடித்து போய் அப்பா தனியாக இருக்கிறார் அப்பாவை பிரசாந்த் ஏதாவது பண்ணி விடுவான் என ஓடுகிறார். மீனா அருகில் இருக்கும் பொழுது அடிக்கடி பிரசாந்த் ஜனார்த்தனன் கண் விழித்து விட்டால் நாம் மாட்டிப்போமே என பதட்டத்தில் இருக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.