பாண்டியன் ஸ்டோர் சீரியலில் டிஆர்பி-யை அதிகப்படுத்த முக்கிய நடிகரை மாற்றும் விஜய் டிவி.. அட இனி இவரா..

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவடைந்த நிலையில் இரண்டாவது சீசன் தற்பொழுது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசனில் பல நடிகர்கள் மாற்றி உள்ளார்கள் இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

பொதுவாக கூட்டு குடும்ப கதை என்பதால் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது அதே போல் இந்த இரண்டாவது பாகமும் அப்பன் மகன் செண்டிமெண்ட்டை கதையாக நகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் திடீரென பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் செந்தில் என்ற ரோலில் நடித்து வருபவர் வசந்த் வசீ. இவர் தற்பொழுது இந்த தொடரில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அவருக்கு பதில் யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வரும் நிலையில்.

வெங்கட் ரங்கநாதன் இனி செந்தில் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இவர் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் முதல் சீசனில் ஜீவா ரோலில் நடித்து வந்தவர் ஏற்கனவே ஜீவா மீனா ஜோடி மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அதனால் மீண்டும் இந்த பிரபலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆக இருக்கிறார்கள்.

இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.