பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் தங்கமயில் சரவணனை பார்க்க சரவணன் வேலை செய்யும் இடத்திற்கு வந்துள்ளார் அப்பொழுது கொழுக்கட்டையை கொடுக்கிறார். கொழுக்கட்டையை இருவரும் சாப்பிடுகிறார்கள் மற்றொரு பக்கம் சரவணன் மாமா கதிர் மற்றும் செந்தில் இருவரும் குமரனை அடிக்க சென்றுள்ளதை தெரிந்து கொண்டு எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
தங்கமயில் வீட்டிற்கு போவதற்கு முன்பு எப்படி போவாய் என கேட்டு சரவணன் தன்னுடைய பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்கிறார் இதனை சரவணன் மாமா பார்த்து விடுகிறார். ஸ்பீட் பிரேக் பார்த்து வண்டியை ஓட்டி செல்கிறார் இதனால் இருவரும் டச்சிங் டச்சிங் செய்து கொள்கிறார்கள். தங்கமயில் வீட்டில் டிராப் செய்துவிட்டு சரவணன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் அம்மா மற்றும் அப்பா இருவரும் பார்த்து வீட்டிற்கு அழைக்கிறார்கள் ஆனால் சிறிது வேலை இருப்பதாக சொல்லிவிட்டு சரவணன் கிளம்புகிறார்.
ரீ ரிலீஸில் கோடியில் கல்லா கட்டிய கில்லி.. மூன்று நாட்களில் எத்தனை கோடி தெரியுமா..?
கிளம்புவதற்கு முன்பு மாமாவிடம் போன் பண்ணி ன்ன விஷயம் கால் பண்ணி இருந்தீங்க என கேட்க நேரடியாக கடைக்கு வா சொல்கிறேன் என கடைக்கு வர சொல்கிறார் கடைக்கு வந்தவுடன் செந்தில் கதிர் இருவரும் அந்த குமரனை அடிக்க சென்றுள்ளார்கள் அப்பாவை அந்த குமரன் அடித்ததால் கோபப்பட்டு அடிப்பதற்கு கிளம்பி விட்டார்கள் என சொன்னவுடன் சரவணன் கோபப்படுகிறார்.
சரவணன் செல்வதற்குள் பாண்டியன் வந்துவிடுகிறார், பாண்டியனிடம் ஏதோ சொல்லி சமாளித்து விட்டு கதிருக்கு போன் பண்ணி எங்க இருக்கிறாய் என கேட்கிறார் கதிர் இருக்கும் இடத்தை சொல்ல மழுப்புவதால் சரவணன் கோவிலில் ஓடும் பாட்டை வைத்து கண்டுபிடித்து விடுகிறார் ஐந்து நிமிடத்தில் நான் அங்கு வந்து விடுவேன் அதற்குள் எங்கும் நகரக் கூடாது என போனில் மிரட்டி விட்டு அங்கு செல்கிறார் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது ப்ரோமோ வீடியோவில் சரவணன் குமரனை அடித்து துவம்சம் செய்கிறார் அப்பொழுது கதிர் மற்றும் செந்தில் வருகிறார்கள் அவர்களும் இணைந்து குமரனை அடிக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.