முதலிரவில் தங்கமயில் செய்த வேலை… சரவணா கோவிந்தா கோவிந்தா வா…

pandian stores 2 may 31
pandian stores 2 may 31

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட்டில் சரவணன் தங்க மயிலுக்கு கல்யாணம் நடந்து விட்டது இன்று முதலிரவு அதனால் அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் தங்க மயில் ரூமில் காத்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் சரவணன் அழைத்து தன்னுடைய வாழ்க்கை வரலாரை மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார் பாண்டியன்.

கதிர், சரவணன், கோமதி, சரவணன் மாமா என அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க இந்தப் புராணத்தை எப்ப தான் நிறுத்துவாரோ என புலம்பி கொண்டிருக்கிறார் இந்த நேரத்தில் செந்தில் வர என்ன எல்லாம் ஒன்று கூடி ஏதோ பேசிட்டு இருக்கீங்க என கேட்க உங்க அப்பா வாழ்க்கை வரலாறு சொல்லிட்டு இருக்காரு கேட்டுட்டு போ என்ன பேசுகிறார் அய்யய்யோ மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களா என ஓடுவதற்கு ரெடியாக உடனே சரவணன் மாமா இதெல்லாம் நீ கேட்டு ஆகணும் என தடுத்து நிறுத்துகிறார்.

பாண்டியன் ஐந்து பிள்ளைகள் பிறந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கடை நன்றாக ஓடிக் கொண்டிருந்ததையும் கூறுகிறார் அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு சரவணன் கிளம்புகிறார் அப்பொழுது சரவணனை செந்தில், கதிர், கதிரின் மாமா அனைவரும் ரூமுக்கு போக சொல்கிறார்கள் அதற்கு சரவணன் இன்னைக்கு வேண்டாம் என்று ைக்கு போகிறான் நானும் மொட்டை மாடியில் படுத்துகிறேன் என கூறுகிறார்.

அதெல்லாம் முடியாது நீ ரூமுக்கு போய் தான் ஆகணும் என அனைவரும் மிரட்டி உள்ளே தள்ளி விடுகிறார்கள் உள்ளே சென்று மயிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார் சரவணன் ஆனால் மயில் தூங்கி விடுகிறார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்க்கும் பொழுது மணி 3:00 மணி உடனே தங்கமயில் அழுது கொண்டே சரவணன் இடம் சாரி கேட்கிறார் தூங்கி விட்டதற்கு சாரி கேட்பதால் இதற்காக சாரி  கேட்க வேண்டாம் என சரவணன் பேசுகிறார்.

அடுத்த நாள் அதிகாலை என்பதால் தங்கமயில் எழுந்து கோலங்கள் போட்டுவிட்டு சமையலும் முடித்து விடுகிறார் உடனே கோமதி எழுந்து மீனா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சரி விடு டயர்டா இருப்பாய் என கோலம் போட செல்கிறார் கோலத்தை யாரோ போட்டுள்ளதை பார்த்து விடுகிறார்கள் உடனே மீணாவிடம் வந்து சரி தூங்கட்டும் காப்பியாவது போட்டு வைத்து விடலாம் என காபி போட செல்கிறார் காப்பியும் போட்டு வைத்து விடுகிறார்கள்.

அடுத்த காட்சியில் மீனா இவ்வளவு வேலையும் செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை என ராஜியை அழைத்து நீ கோலம் போட்டியா என கேட்க நான் எழுந்திருச்சு இப்பதான் வருகிறேன் என கூறுகிறார் அதே போல் மீனாவை எழுப்பி கேட்க மீனா இப்பதான் தூங்கி எழுந்தேன் என்பதை சொல்லுகிறார் அப்பொழுது யார் இதனை போட்டு இருப்பார் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் அங்கிருந்து சாம்பிராணி உடன் நடந்து வருகிறார் உடனே தங்கமயில் செய்த அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் ராஜி மற்றும் மீனா இருவரும் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.