pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் குடும்பத்திற்கும் ராஜூ குடும்பத்திற்கும் ஏற்கனவே பகை இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜி வீட்டை விட்டு ஓடி வந்ததால் கோமதி இப்படியே போனால் அண்ணன் மானம் கப்பல் ஏறிவிடும் என கதிரை திருமணம் செய்து வைத்து விடுகிறார். அதனால் இரண்டு வீட்டிற்கும் மிகப்பெரிய சண்டை ஏற்படுகிறது ஆனால் இதுவரை யாரும் உண்மையை கூறவில்லை.
அதேபோல் அப்பா கஷ்டப்படக்கூடாது என அப்பாவையே எதிர்த்து பேசி விட்டு வெளியே செல்கிறார். இந்த நிலையில் ராஜ் உண்மையை சொல்லிடலாம் என நினைத்து சொல்ல முயற்சி செய்யும்போது கதிர் தன்மீது பழியை போட்டுக்கொண்டு காசு செலவாகிவிட்டது என தெனாவட்டாக பேசி விடுகிறார். மற்றொரு பக்கம் பாண்டியன் ஸ்டோர் கடைக்கு வந்து ஆளாளுக்கு கேள்வி கேட்க மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார் பாண்டியன்.
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் ராஜி கட்டிலில் உட்கார்ந்து இருக்கிறார் அப்பொழுது கதிர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார் நீ வேணா மேல படுத்துக்கோ நான் வேணா கீழே படுத்துகிறேன் என ராஜி கூற உடனே கதிர் கோவப்பட்டு எழுந்து எழுந்திரு உன்னால நிறைய இழந்துட்டேன் இதுக்கு மேல கட்டிளையும் இழக்க முடியாது என கத்துகிறார்.
உடனே ராஜி முரடன் என கூற யாரை பார்த்து முரடன்னு சொன்ன என பேசுகிறார் நான் முரடானா நீ இழுத்துட்டு ஓடி வந்தியே அவன் ரொம்ப நல்லவனோ என ராஜ்ஜிய பார்த்து கதிர் கேட்க ராஜி அழுது கொண்டிருக்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.
பாண்டவர் பூமி படத்தில் நடித்த ஷமிதாவை ஞாபகம் இருக்கா… இவரின் கணவர் சன் டிவி பிரபலமா..