ஐடியா கொடுத்து வசமாக ராஜியிடம் சிக்கிக் கொண்ட தங்கமயில்.. குடும்பத்தை பிரிக்க அஸ்திவாரத்தை போடும் தங்க மயிலின் அம்மா..

pandian stores 2 june 8 episode
pandian stores 2 june 8 episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு கால் பண்ணுகிறார் அப்பொழுது பேசிக் கொண்டிருக்க இன்று வீட்டில் சரியான சம்பவம் நடந்தது என கூறுகிறார் அப்பொழுது என்ன நடந்தது என தங்கமயில் அம்மா கேட்க அந்தக் கதிர் செலவுக்கு காசு கொடுத்தான் அதனால் மாமா செம டென்ஷன் ஆகிவிட்டார் என பேசுகிறார் அப்போ இதுவரைக்கும் காசு கொடுக்கலையா என தங்கமயில் அம்மா கேட்க இப்பதானே வேலைக்கு போறேன் இப்பதான் கொடுத்திருக்கான் எனக் கூறுகிறார்.

அப்போ மாப்பிள்ளை மட்டும் தான் வீட்ல காசு கொடுக்கிறதா என பேசுகிறார்கள் அதற்கு தங்கமயில் அப்படித்தான் நினைக்கிறேன் என கூறுகிறார் இந்த நிலையில் உன்னுடைய சித்தி விருந்துக்கு உங்க ரெண்டு பேரையும் அழைத்து இருக்காங்க நாளைக்கு போய்விடலாம் என பேசுகிறார் அதற்கு தங்கமயில் நான் அவரிடம் ஒரு வார்த்தை கேட்கிறேன் என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் வரும்பொழுது எல்லா நகையும் எடுத்துக் கொண்டு வா லாக்கரில் வைத்து விடலாம் என தங்கமயில் அம்மா கூற அதை எப்படி நான் எடுத்துட்டு வர முடியும் என பேசுகிறார் இல்லனா மாட்டிப்போம் ஒழுங்கா எடுத்துக்கிட்டு வந்து விடு என கூறுகிறார் சரி என போனை வைக்கிறார்

அதேபோல் தங்கமயில் போன் பண்ணுவதற்கு முன்பு சரவணன் போன் பண்ணி என்ன பண்ணுகிறாய் என கேட்கிறார் இப்பதான் கத்திரிக்காய் குழம்பு முட்டை பொரியல் என அனைத்தையும் வைத்தேன் என கூறுகிறார் ஓ இவ்வளவு செஞ்சியா என பேசுகிறார் சரவணன் இதெல்லாம் உங்களுக்கு பிடிக்குமா என தங்கமயில் கேட்க ரொம்ப பிடிக்கும் நைட் வந்து சாப்பிட்டுகிறேன் எனக் கூறுகிறார் ஆனால் நைட் வேற மெனு என்று தங்கமயில் பேசுகிறார்.

அப்படி இருக்க மற்றொரு பக்கம் ராஜி ஏதோ சின்சியராக எழுதிக் கொண்டிருக்க அதனைப் பார்த்த மீனா அமைதியாக நிற்கிறார் உடனே கோமதி வந்து என்ன அவளையே பார்த்துகிட்டு இருக்க என கேட்க அவ ஏதோ எழுதினால்  பார்த்துகிட்டு இருக்கேன் என கூறுகிறார் அப்பொழுது ராஜு நீங்க ரெண்டு பேரும் எப்ப வந்தீங்க என பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

நீ சின்சியரா எழுதிக்கிட்டு இருந்தியே, அப்பவே வந்து விட்டோமே என பேச அதற்கு ராஜி நான் வேலைக்கு போகலாம் என்று இருக்கிறேன் என பேசுகிறார் அதற்கு கோமதி ஏன் அதெல்லாம் தேவையில்லை என பேச இல்ல உங்க புள்ள மட்டும் கஷ்டப்படுறாரு அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதனால நானும் வேலைக்கு போறேன் என பேசுகிறார். அந்த சமயத்தில் தங்கமயில் வர தங்கமியிடம் ஏன் வேலைக்கு போகணும் என பேசுகிறார்.

நம்ம வீட்ல இருந்தே வேலைய பாக்கலாமே என கோமதி கூற அதற்கு என்ன வேலை பார்க்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் ஒரு ஐடியா சொல்லுகிறார் வீட்ல இருந்த டியூஷன்  எடுக்கலாம் ஊதுவத்தி தயாரிக்கலாம் சோப்பு தயாரிக்கலாம் என பேச டியூஷன் நல்ல ஐடியாவா இருக்கு என மீனா அதிர்ச்சடைகிறார் அதே போல் ராஜ்ஜியம் இது செம ஐடியா என பேசுகிறார் நான் மட்டும் எடுத்தால் 10 பேருக்கு தான் டியூஷன் எடுக்க முடியும் ஆனால் இன்னொரு ஆளும் சேர்ந்தால் இருபது பேர் எடுக்கலாம் என பேசுகிறார்கள்.

உடனே கோமதி நீ எடுக்கும் டியூஷனுக்கு என் பெயரை வை என பேச அதற்கு மீனா அதெல்லாம் சரி வராது என்னோட பெயரை வை எனவும் கூறுகிறார் இப்படி பேசிக் கொண்டிருக்க 20 பேருக்கு டியூஷன் எடுக்கணும்னா இன்னொரு ஆள் தேவையே அது யார் என கேட்க அதற்கு சரியான ஒரு ஆள் இருக்காங்க அவங்க இருந்தா போதும் என கூறுகிறார் ராஜி. அப்பொழுது யார் என கேட்க அதற்கு சட்டென ராஜி அக்கா தான் அவங்க தானே அதிகமா படிச்சிருக்காங்க என தங்க மயிலை பார்த்து   பேசுகிறார்.

இதைக்கேட்டு தங்க மயிலுக்கு தூக்கி வாரி போடுகிறது என்ன நானா என அதிர்ச்சடைகிறார் தானே வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டமே எனவும் யோசிக்கிறார் இந்த நிலையில் சாப்பாடு கேரியர் எங்கே இருக்கிறது என கோமதியிடம் கேட்க அது பரண் மேலே இருக்கிறது எனக்கு கூறுகிறார். இப்ப எதுக்கு தங்கமயில் சம்பந்தமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என மீனாவுக்கு லேசாக சந்தேகம் வருகிறது.

அப்பொழுது தங்கமயில் நீ எப்ப பாரு  என்ன தங்கம் மயில் என்று கூப்பிடுகிற நான் உன்னை விட மூணு வயசு மூத்தவனள் என்ன அக்கான்னு தான் கூப்பிடனும் என கோபப்படுவது போல் நடிக்கிறார். உடனே மீனா அக்கா அக்கா எனக் கிண்டல் பண்ணுகிறார் கோமதி அக்கான்னு தான் கூப்பிடனும் எனவும் பேசுகிறார். தங்கமயில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு சரவணனுக்கு கொடுத்து வருகிறேன் என பேசுகிறார் அந்த சமயத்தில் பாண்டியன் வருகிறார்.

எங்கே செல்கிறாய் என கேட்க மாமாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வருகிறேன் என பேசுகிறார் எப்படி போவாய் என கேட்க நடந்து போயிடுவேன் இல்லனா பஸ்ல போரன் என பேசுகிறார் அதெல்லாம் வேண்டாம் நான் ஆட்டோ அரேஞ்ச் பண்றேன் அதுல போ என பாண்டியன் கூறுகிறார். சாப்பாடு எடுத்து சென்ற தங்கமயில் சரவணனுக்கு கொடுக்கிறார். உடனே சரவணன்  நீ எதுக்கு இவ்வளவு தூரம் வர நானே வந்து இருப்பனே என பேசுகிறார் இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டே சாப்பிடுகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.